அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட தேவனுடைய சிறந்த வேலைப்பாடு The Identified Masterpiece Of God 64-1205 1.மிக்க நன்றி, சகோதரனே. பிரசங்க பீடத்தில் மூன்று மாதங்களில் இதுவே என்னுடைய முதல் முறை என்று நான் கூற பில்லி விரும்புகிறான். அவன்...நான் முதன்முறையாக அவனை சாட்சி பகரும்படிக்கு அழைத்தது எனக்கு நினைவிருக்கிறது, அவன், "முதலாவது காரியம், நான் பயமடைந்தேன்” என்று கூறினான். நானும் கூட அவ்வாறு இருந்தேன். சுமார் முப்பத்தைந்து வருட கால ஊழியத்தில், நான் ஊழியத்தில் இருந்து வந்ததற்குப் பிறகு, நான் பிரசங்க பீடத்திலிருந்து அதிக நேரம் விலகியிருப்பது இதுவேயாகும். எனக்கு ஒரு சிறு ஓய்வு தேவைப்பட்டது, எனவே சகோதரன் மோஸ்லியும், நானும், இங்குள்ள சில சகோதரர்களும் ஒரு சிறு வேட்டைப் பயணத்தில் இருந்தோம். நாங்கள் இப்பொழுது இளைப்பாறி யுள்ளோம். எனக்கு...ஏறக்குறைய செப்டம்பர் முதல் தேதிக்குப் பிறகு இது என்னுடைய முதல் கூட்டம். அது ஏதோ ஒரு... ஒரு ஊழியத்தில் நீங்கள் ஒருவிதமாக தரித்திருக்க வேண்டும். 2. இப்பொழுது நான் அவர்களை அந்த மின்விசிறியை அணைக்கும்படி அல்லது அவர்களால் அதை அணைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறேன், ஏனென்றால் அது கேட்பதற்கு கடினமாக உள்ளது என்பதை நான் அறிவேன். யாரோ ஒருவர் தங்களுடைய சாட்சியைக் கொடுக்கும்போது, அது கேட்பதற்கு கடினமாக இருந்தது என்பதை, நான் அறிவேன். அவைகளைக் கேட்பது எனக்கும் கடினமாக இருந்தது. இப்பொழுது உங்களால் முழுவதுமாக கேட்க முடிகிறதா? நல்லது. அவர்கள் அதை சரி செய்யும் வரையில் இந்த ஒலிபெருக்கியின் அருகில் ஒருவிதமாக நிற்க எனக்குத் தெரியும். 3. இது நிச்சயமாகவே எனக்கு ஒரு—ஒரு மகத்தான சிலாக்கியமாய் உள்ளது, நான்—நான் நிச்சயமாகவே தலைவருக்கும், இங்கு யூமாவில் உள்ள முழு சுவிசேஷ வர்த்தக புருஷர் என்ற குழுவிற்கும், மற்றும் எல்லா ஊழியக்காரர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இங்கே இந்த அருமையான பாடகர்கள்,ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இங்கே இருந்தனர், நான் அவர்கள் கூட்டத்தில் பாடுவதைக் கேட்க விரும்புகிறேன். அது உண்மையாகவே நன்றாக இருந்தது. யோவான் என்னைக் கண்டாரா என்று அவர்கள் பாடிக்கொண்டிருந்தபோது, நான்—நான் சற்று யோசித்தேன். அவன் அவ்வாறு செய்தான் என்று நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இங்கே ஒரு எழுப்புதலில் இருக்கிறீர்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஊழியம் செய்யும்போது, கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. பீனிக்ஸ் மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும், அதாவது...மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வந்துள்ளவர்களுக்குமே. 4. நான் குழுக்களைக் குறித்து பேச விரும்புகிறேன். நான் பெந்தேகோஸ்தே ஜனங்களண்டை வந்தபோது, நான்...ஒரு பெந்தேகோஸ்தே அனுபவத்தை உடையவனாயிருந்தேன், ஒரு பெந்தேகோஸ்தே சபை இருந்தது என்பதை அறியாமலிருந்தேன். அப்பொழுது நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்டாக இருந்தேன். நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தேன், நான் பெற்றிருந்த அதே காரியத்தை விசுவாசித்த சில ஜனங்கள் இருந்தனர் என்பதை நான் கண்டறிந்தேன். நான் அதைப் பெறுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். எனவே பவுல் கூறினதுபோல, நான் ஒருவனாயிருந்தேன், அவனோடு கூற முயற்சிக்கவில்லை, ஆனால் ஒருவிதமான “அகாலப்பிறவி” என்று நான் நினைக்கிறேன். ஆனால்...நாம் அழைக்கிறபடி, ஒருவிதமான நிதானமற்ற முடிவுக்கு நான் சென்றுவிட்டேன் என்றே என்னுடைய சகோதரர்கள் நினைக்கத் தோன்றினது. ஆனால் நான் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்டேன் என்பதை நான்—நான் அறிந்திருந்தேன். அதன்பின்னர், அவர்கள் அதை அங்கே பெற்றிருந்ததைப் போன்றே என்னுடைய அனுபவம் இருந்தது. அந்த விதமாகத்தான் நான் அதை விரும்புகிறேன். 5.ஆனால், நான் அவர்கள் மத்தியில் வந்தபோது, அதைக் குறித்த இருதயத்தை நொறுக்கும் பாகம், என்னுடைய பாப்டிஸ்டு சபையைப் போன்றே, அவர்களும் வெவ்வேறு ஸ்தாபனங்களாக பிரிந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள்...பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்பட்ட ஒன்று மாத்திரமே இருந்தது என்று நான் நினைத்தேன், அதுதான் அது. ஆனால், அவைகளில் பல்வேறுபட்ட ஸ்தாபனங்கள் இருந்தன என்பது கண்டறியப்பட்டது. எனவே, நான்...அவர்கள் யாவரும் அருமையாயிருந்தனர். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் சிலர், இந்த குழுக்களில் இருந்தனர் என்பதை நான் அறிவேன். அவர்கள்—அவர்கள் உண்மையாகவே, வெவ்வேறு ஸ்தாபனங்களாயிருந்தனர். நாம் கிறிஸ்துவோடு இருதயத்தில் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதே என்னுடைய—என்னுடைய சிந்தனையாயிருந்தது, நான் அவர்களில் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை சேரவேயில்லை. நான் அவைகளுக்கு மத்தியில் தரித்திருந்து, இரு கரங்களையும், எல்லாக் கரங்களையும் பற்றிக் கொண்டு, “நாம் சகோதரர்கள்” என்று கூற முயற்சித்தேன். நாம்...ஒன்றிலிருந்து மற்றொன்றிலிருந்து, வித்தியாசமான சிறு காரியங்களை நாம் காணலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி, நாம் இன்னும் சகோதரர்களாகவே இருக்கிறோம், ஏனென்றால் நாம் ஒரே ஆவியினால் பிறந்திருக்கிறோம். நாம் தேவனுடைய குடும்பமாயிருக்கிறோம். 6. அதன்பின்னர் கிறிஸ்தவ வர்த்தகர்கள், முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்கள், இந்த குழுவில், சகோதரன் ஷகாரியனுடன் முதல் கூட்டங்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அந்த ஸ்தாபனம் உண்டாவதற்கு முன்னமே, அல்லது அந்த ஸ்தாபன அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதற்கு முன்னமே நான் அவரை அறிவேன். அது ஒரு மகத்தான காரியம் என்று நான் நினைத்தேன். இந்த முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களோடு சர்வதேச ரீதியில் பயணிக்க, அது எனக்கு ஒரு திறந்த வாசலாயிருக்கிறது. 7.அங்கே, சில சமயங்களில், ஒரு கூட்ட ஊழியக்காரர்களை நீங்கள் கண்டால், சில சமயங்களில், அவர்கள் மற்றொரு குழுவிற்கு எதிராக ஒரு சிறு உணர்வைப் பெற்றிருக்கிறார்கள், ஏனென்றால் யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கூறியதற்காக. அது எல்லா இடங்களிலும் இல்லை, ஆனால் நாம் அதை உள்ளூரிலேயே கண்டறிகிறோம். ஒரு சபை அதற்கு நிதியுதவி அளிக்கப் போகிறது என்றால், மற்ற சபை அதனோடு எந்த சம்மந்தமும் கொண்டிருக்காது. 8.ஆனால் முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களிடத்தில், அது எனக்கு ஒரு திறந்த வாசலாயிருந்து வருகிறது. அவர்கள் அதன் உள்ளே வரும்போது, அப்பொழுது நான் என்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து, நாம் நம்மால் தொடர்புகொள்ள முடியும்; ஒருக்கால் இரண்டு போதகர்களுக்கு ஒரு உணர்வு, அல்லது ஏதோ ஒன்று இருக்கலாம். இது ஒரு மகத்தான திறந்த வாசலாயிருந்து வருகிறது, நான் அவர்களுக்காக அநேக வருடங்களாக சர்வதேச பிரயாணம் செய்து, அவர்களுடைய குழுக்களில் பேசி வருகிறேன். 9.நான்...யூமா ஒரு மிகப் பெரிய பட்டணம் அல்ல, நான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் இருந்து வந்ததை விட இது மிகவும் பெரியது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இங்கே உங்களுடைய தலைவரை சந்தித்தேன். அந்த...அவர்... உங்களுடைய குழுவின் பல்வேறுபட்டவர்களை சந்தித்தேன். உங்களுக்கு இங்கே ஒரு அருமையான வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன். 10. இன்றிரவு, நான் இங்கே அமர்ந்து ஜனங்களை நோக்கிப் பார்த்தபோது, நான் அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். சீக்கிரத்தில் நாம் இந்த சிலாக்கியத்தை இழந்துவிடப் போகிறோம் என்பதை, நீங்கள் அறிவீர்கள். உலக சபைகளின் ஆலோசனை சங்கம் விரைவில் நம்மை விழுங்கிவிடும். இன்றிரவு என்னுடைய கூட்டத்தினரில் பெரும்பாலோர் பெந்தேகோஸ்தேயினராலும், பாப்டிஸ்டுகளாலும், மற்றும்—மற்றும் தேவனுடைய சபையிலிருந்தும், உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்கு புறம்பேயுள்ளவர்களாயும் உள்ளதை நான் யூகித்துப் பார்க்கிறேன். மேலும்—மேலும் அவர்கள், அதன் பேரில் தான் அவர்கள் நடந்து கொண்டனர், அதைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று வேதம் கூறியுள்ளது. நாம் அதைக் குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கிறோம், எனவே நாம் அதைக் குறித்து விலகியிருப்போமாக. இன்றிரவு அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, இந்த பாடலில், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கும் என்பதைக் குறித்தும், அது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிக அருகாமையில் இருக்கலாம் என்றே உள்ளது. 11. நாம் இந்த விதமான ஐக்கியத்தோடு ஒன்று சேரும்போது, அது நமக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறது, அதுவே நம்மை ஒருவருக்கொருவர் நெருக்கமாக இழுக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் ஒருவரையொருவர் நெருங்குகையில், நாமும் கூட தேவனிடத்தில் நெருங்கி வருகிறோம், ஏனென்றால் இயேசு, "இந்த என் சிறியவர்களாகிய இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்றார். 12. இங்கு எங்கோ ஒரு சிறு பையன் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன், ஜோசப். நான் பில்லியை இங்கே உட்கார வைத்துள்ளேன். இரண்டு மகள்களும், ஒரு மனைவியும் அங்கே பின்னால் அமர்ந்துள்ளனர். இப்போது யாரிடமாவது ஏதாவது இருந்தால்...நீங்கள் உண்மையாகவே அருமையான ஒன்றைச் செய்ய விரும்பினால், நீங்கள் அதை எனக்குச் செய்வதைக் காட்டிலும் என்னுடைய பிள்ளைகளுக்குச் செய்வதையே நான் அதிகமாக விரும்புகிறேன். எனவே நான் ஒரு பெற்றோர் என்ற முறையில், உணரலாம், அவரே பெற்றோர்த்துவத்தின் ஊற்று, அந்த விதமாகவே தேவன் உணருகிறார் என்று நான் நினைக்கிறேன். நாம்...நாம் ஒருவரையொருவர் சேவிக்கும்போது, நாம் அவரை சேவிக்கிறோம். அந்த விதமாகத்தான் நாம் தேவனை சேவிக்கிறோம். 13. இது உண்மையென்று அறிந்து, இந்த குழுவை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், அது சுவிசேஷ ஊழியங்களில் நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்...முழு சுவிசேஷ வர்த்தக புருஷர் என்பதற்கு உண்மையாகவே குறிப்பிட்ட உபதேசம் எதுவுமே இல்லை. அவர்கள் முழு சுவிசேஷத்திற்காக நிற்கின்றனர். ஒரு மனிதன் வித்தியாசப்பட்டால், அது முற்றிலும் சரிதான். அது சரிதான். எப்படியாயினும், நமக்கு ஐக்கியம் உண்டு. எனவே நான் நினைக்கிறேன், அது ஒரு...நான் இங்கே இந்த நகரத்தில் வாழ்ந்திருந்தால், அந்த குழுவை சந்தித்தபோது, வழி ஏதாகிலும் இருக்குமானால், நான் அங்கு இருப்பேன், என்னால் முடிந்தவரை எல்லோரையுமே அங்கு வரும்படி செய்வேன். அது உண்மை, ஏனென்றால் அது—அது நம்மை ஒன்று சேர்த்து பலப்படுத்துகிற ஒரு காரியமாய் உள்ளது. 14.நான் டூசானில் வசிக்கிறேன், நான் எல்லா நேரத்திலும் அந்த குழுவில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். பீனிக்ஸ்ஸில், நான் அரிசோனாவுக்குச் சென்றதிலிருந்து, ஒவ்வொரு முறையும் நான் வெளியேறிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் ஃபீனிக்ஸில் இருக்கிறேன்—பீனிக்ஸ்க்கு செல்ல, ஏனென்றால்... என்னுடன் யாரையாவது அழைத்து, யாரையாவது அழைத்து, மற்ற ஊழியக்காரர்களை அழைத்துக் கொண்டு வர முயற்சிக்கிறேன். மேலும், "சரி, பாருங்கள், நீங்கள் பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நாங்கள்...” என்று கூறலாம். 15. நான், “நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை... என்னோடு வருவீர்களாக. என்னோடு. ஒரு-ஒரு நண்பனாக வாருங்கள்” என்று கூறுகிறேன். 16. அவர்களை சிறிது நேரம் அங்கே அழைத்து வாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் ஐக்கியத்திற்காக வாஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிகின்றனர். நாம் அந்தவிதமாகவே செய்து கொண்டிருக்க வேண்டும். இது ஒரு மகத்தான முடிவு கால அடையாளமாயுள்ளது. தேவன் இந்த குழுவை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு நம்மை மகிமையில் ஏற்றுக்கொள்ளும் வரை அது—அது நிலைத்திருக்கட்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. 17. இப்பொழுது, யூமாவின் வழியாக சென்ற என்னுடைய முதல் பயணம் எனக்கு நினைவிருக்கிறது. மணிக்கு முப்பது மைல் வேகத்தில் செல்லக்கூடிய மாடல்-டி ஃபோர்ட் காரில் நான் சென்றேன். இன்றைக்கு நான் காரோட்டிச் செல்லும்போது, நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஃபோர்ட் காரின் பேரில் இன்னும் நம்பிக்கையுள்ளவனாய் இருக்கிறேன்; நான் இன்னும் ஒன்றை வைத்திருக்கிறேன், அதைத் தவிர வேறு ஒன்றுமே வைத்ததில்லை. ஆனால் நான்...இப்பொழுது, நான் ஃபோர்ட் கார்களை விற்பதில்லை. இப்பொழுது, அது அதற்குரிய ஒரு விளம்பரத்திற்காக இல்லை. பார்த்தீர்களா? ஆனால் அந்த ஃபோர்ட் கார் எப்படியாய் எனக்கு நினைவிருக்கிறது... ஏறக்குறைய என் வயதுடைய சகோதரர்களாகிய உங்களில் அநேகருக்கு பழைய மாடல் டி கார் நினைவிருக்கும். இது 1927-ல் இருந்தது. நீங்கள் உண்மையாகவே நன்றாக காண வேண்டும், இல்லையென்றால் நீங்கள் யூமாவைக் கடந்து செல்லும்போது, அதைக் கண்டுபிடிக்க முடியாது. அது மிகச் சிறியதாயிருந்தது, நீங்கள் நிச்சயமாகவே வளர்ந்திருக்கிறீர்கள். ஆனால் நான் என்னுடைய ஃபோர்ட் காரில் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் செல்வது, அது மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் இந்த பக்கமாகவும், பதினைந்து மைல் வேகத்தில் இந்த பக்கமாகவும் சென்றது. எனவே, அதை ஒன்றாக சேர்த்துக் கொண்டால், நான் மணிக்கு முப்பது மைல் வேகத்தைக் கொண்டிருந்தேன். யூமா வளர்ந்துள்ளது. 18. இந்த மகிமையான சபை, அதாவது, நாம்—நாம் இந்த அற்புதமான விசுவாசத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். 19. அதைச் செய்த, சகோதரனே, உமக்கு நன்றி. 20. அதுவும் கூட வளர்ந்துள்ளது, நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 21. நீங்கள் அருகில் இருந்தால், இந்தக் கூட்டங்களில் ஏதாகிலும்... என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஞாயிற்றுக் கிழமை பீனிக்ஸ் என்ற இடத்தில் நான் பேச உள்ளேன். அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஃபிளாக்ஸ்டாப்பில் பேச உள்ளேன். அடுத்த திங்கட்கிழமை, இருபத்தியொன்றாம் தேதி, டூசானில் ஒரு விருந்து உள்ளது. நீங்கள் யாவரும் அழைக்கப் படுகின்றீர்கள். 22. கர்த்தருக்குச் சித்தமானால், நான் வெஸ்ட்வர்ட் ஹோ ஹோட்டல் நடன அரங்கில் பேச விரும்புகிறேன் என்று நான் நினைக்கிறேன். எந்த இரவு அது துவங்குகிறது? [யாரோ ஒருவர், “அது பதினேழாம் தேதி ஞாயிறு பிற்பகல்” என்கிறார். ஆசி.) ஞாயிறு பிற்பகல், பதினேழாம் தேதி, ஒரு சிறு சுவிசேஷ ஆராதனை உள்ளது. இந்த பாடகர்கள் நமக்கு உதவி செய்ய, அந்த நேரத்தில் அருகாமையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் புதன் கிழமை வரை அங்கே இருக்கப் போகிறோம். அது ஞாயிறு பிற்பகல் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அதைச் செய்கிறோம், ஏனென்றால் நாங்கள் சபைகளின் நிகழ்ச்சிகள் எதனோடும் குறுக்கிட மாட்டோம். அதன்பின்னர், திங்கள் மற்றும் செவ்வாய், அதன்பின்னர் புதன் கிழமை நாங்கள் மேற்கில் உள்ள ரா-..ரமதா சத்திரம், ரமதா விடுதியில் இருக்கிறோம். அதன்பின்னர் வியாழனன்று நாம் வெஸ்ட் வேர்ட் ஹோ என்ற இடத்தில் துவங்குகிறோம். அதுவா? 23. [ஒரு சகோதரன், "வெஸ்ட் வேர்ட் ஹோ, ஞாயிறு, திங்கள், செவ்வாய். அதன்பின்னர் நாங்கள் புதன் கிழமையன்று, ரமதா விடுதிக்குச் சென்று, அங்கே தொடர் கூட்டங்கள் வரையில் நாங்கள் தங்கியிருப்போம்” என்கிறார்.-ஆசி.) தொடர் கூட்டங்கள் ரமதா சத்திரத்தில் நடைபெறுகின்றன. எனவே எந்த நேரத்திலும் நீங்கள் வருவதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைவோம். 24. இப்பொழுது, நாம் இந்தப் புத்தகத்திற்குத் திருப்பு வதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் வணங்கி, ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. 25. இப்பொழுது, தேவன் நம்மை எந்த மண்ணில் இருந்து எடுத்தாரோ அந்த மண்ணுக்கு நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, இயேசு வர தாமதித்தால், நாம் என்றோ ஒரு நாள் அந்தவிதமாகவே திரும்பி செல்ல வேண்டும். நான் இங்கிருந்து சென்றது முதற்கொண்டே, கிழக்கிலிருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது, எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி...அவள் எடித் ரைட் என்ற பெயர் கொண்ட சிறு பெண். இந்த பிற்பகல், மூன்று மணிக்கு தேவனை சந்திக்கும்படி கடந்து சென்றுவிட்டாள். நாங்கள் திரும்பவும் அங்கு செல்ல வேண்டும். இங்குள்ள எவரேனும் ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்பினால், நீங்கள் உங்களுடைய கரத்தை தேவனண்டை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 26. பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த அருமையான ஐக்கியத்தை அவ்வளவாய் அனுபவித்து மகிழ்ந்து, பாடிக்கொண்டிருக்கையில், ஓ, யோவான் என்னைக் கண்டானா? என்ற அந்த பாடலை நான் கேட்டபோது எப்படியாய் என் இருதயம் சிலிர்த்தது. பிதாவே, நாங்கள் ஒவ்வொருவரும், நாங்கள் அங்கிருப்போம் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இப்பொழுது தூசியை நோக்கி பணிந்திருக்கிறோம், எங்களுடைய-எங்களுடைய நன்றியையும், எங்களுடைய மனந்திரும்புதலையும், மற்ற ஒவ்வொரு வருக்கான எங்களுடைய ஜெபங்களையும் பெற்றுக் கொள்ளும்படி நாங்கள்— நாங்கள் உம்மிடம் ஜெபிக்கிறோம். 27. இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தைக்கு, மற்றதைக் காட்டிலும் மிகவும் புனிதமாக தென்படுகிற கூட்டத்தின் புனிதமான பாகத்திற்கு திரும்புகிறோம், ஏனென்றால் நாங்கள் இந்த நேரத்தில் ஜனங்களோடு இடைபடுகிறோம் என்பதை நாங்கள் அறிவோம், அவர்களை ஒரு சத்தியத்திற்கும், கிறிஸ்துவினிடத்திற்கும், கிறிஸ்துவாகிய வார்த்தையண்டைக்கும் வழி நடத்த வேண்டும். நீர் எங்களுக்கு வார்த்தையைத் திறக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள்—நாங்கள் குறைவுள்ளவர் களாயிருக்கிறோம், ஆனால் நீர் யாவற்றிற்கும் போதுமான வராயிருக்கிறீர். எனவே எங்களுடைய பலவீனமான முயற்சிகளை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், தேவனுடைய வார்த்தையில் எங்களையும், எங்களுடைய ஸ்தானத்தையும் இன்றிரவு நாங்கள் கண்டறிவோமாக என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இதை அருளும். நாங்கள் உமக்கு துதியை செலுத்துவோம், ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 28. இப்பொழுது, இது இங்கே இருப்பது உண்மையாகவே அருமையாயுள்ளது. நான் இங்கே குறிப்பிட்ட சில குறிப்புகளை வைத்துள்ளேன், ஒரு சில நிமிடங்களுக்கு, இந்த மண்டபத்தை ஒரு மாலை நீண்ட நேரம் வைத்திருக்க நாம் அனுமதிக்கப்படமாட்டோம் என்று நான் நினைக்கிறேன். நானும் கூட, பெந்தேகோஸ்தே ஜனங்கள் மத்தியில், ஒருவிதமாக மெதுவாக இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 29. எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை நான் உங்களிடம் கூறியிருக்கலாம். நான் முதலில் ஒரு பெந்தேகோஸ்தே ஊழியரைக் கண்டபோது, அது செயின்ட் லூயிஸிலிருந்து வந்திருந்த சங்கை ராபர்ட் டாடர்டியாய் இருந்தது. உங்களில் யாருக்காவது அவரைத் தெரியுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அவருடைய சிறு பெண்ணின் சாட்சியை நீங்கள் புத்தகத்தில் பார்த்தீர்கள். அவர்அவர். அவள் செயின்ட் விட்டஸ் டான்ஸ் வியாதியிலிருந்து குணமடைந்தாள், அவள் கைவிடப் பட்டிருந்தாள். அந்தவிதமாகத்தான் நான் முதல் பெந்தேகோஸ்தே ஜனங்களை சந்தித்தேன். 30. மேலும், இது, அவர் பிரசங்கிப்பதை நான் கேட்கச் சென்றேன், மேலும் - மேலும், என்னே, அவரால் அவரால் பிரசங்கிக்க முடிந்தது. அவர்...அவர் எதற்காகவும் காத்திருக்கமாட்டார். அவர் மிக வேகமாக, அவருடைய மூச்சே திணறி, முகமே நீல நிறமாக மாறுமளவிற்கு, அவருடைய முழங்கால்களை ஒன்றாக இணைத்து, அவர் ஏறக்குறைய தரையோடு மோதுமளவிற்கு அவர் பிரசிங்கிப்பார். அவர் மூச்சை இழுத்து, எழும்பி, உங்களால் நகரத்தின் கடைசியிலும் அவர் பேசுவதை கிட்டத்தட்ட கேட்க முடிந்த அளவுக்கு பிரசங்கிப்பார். “என்னே, என்னால்—என்னால் அதைக் குறித்து அவ்வளவு வேகமாக நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று எண்ணினேன். 31. நான் என்னுடைய நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பதையும், மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள், எனவே நீங்கள் ஒரு சில நிமிடங்கள் என்னோடு பொறுத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 32.ஒரு காரியம் நிச்சயம் உண்டு, அது தவறாது என்று எனக்குத் தெரியும், அது அவருடைய வார்த்தையாயுள்ளது. “வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அவருடைய வார்த்தையோ ஒருக்காலும் தவறிப் போவதில்லை.” எனவே நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை வைத்திருந்தால், அதிலிருந்து ஏசாயா புத்தகத்தில், ஏசாயா 53-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்பினால், இப்பொழுது நாம் திருப்புவோம். நான் இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, ஒரு சூழலை உருவாக்க ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வாசிக்க விரும்புகிறேன். 1.எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப் பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்ட வரென்று எண்ணினோம். 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார். 7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிற வனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப் பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார் .9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரிய வானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10 கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். 33. நான் இதை ஒரு சிறு உரைக்காக கூற விரும்புகிறேன். நான் அதிலிருந்து; அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட தேவனுடைய சிறந்த வேலைப்பாடு என்ற ஒரு பாடப் பொருளை எடுக்க விரும்புகிறேன். 34. இப்பொழுது, இது ஒரு சிறந்த வேலைப்பாடாக தேர்ந்தெடுக்கும்படியாக, வாசிப்பதற்கு முற்றிலும் ஒரு ஒரு-ஒரு பாடப் பொருளாய் இருக்கும். ஆனால் நாம் அதை நோக்கிப் பார்க்கும்போது, நாம் நினைப்பது போல், அது ஒரு சிறந்த வேலைப்பாட்டைத் தவிர வேறொன்றாக இருக்கும், ஏனென்றால் அது, "நம்முடைய முகங்களை அவரிடத்திலிருந்து மறைத்துக்கொண்டோம், நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்று கூறியுள்ளது. அநேக சமயங்களில், நாம் அதை ஒரு சிறந்த வேலைபாடு என்று அழைக்கிறோம், அதே சமயத்தில் தேவன் அதனோடு எந்த சம்மந்தமும் வைத்திருக்கமாட்டார். ஏனென்றால் மனுஷ ஞானம் தேவனுக்குப் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் தேவனுடைய பைத்தியம் மனிதனுடைய எல்லா ஞானத்தைக் காட்டிலும் அதிக ஞானமுள்ளதாயிருக்கிறது. 35. தேவன் நமக்கு ஏதோ ஒரு காட்சியைக் கொடுக்கிறார் என்பதை நாம் இங்கே காண்கிறோம். நான் இந்தக் காட்சியை நமக்கு முன்பாக கொண்டு வர முயற்சிக்க விரும்புகிறேன், நம்மில் சிலர் ஒன்றாக சந்திப்பது இதுவே கடைசி முறையாக இருக்கக் கூடும் என்பதை நான் உணருகிறேன். நாம் இப்பொழுது உள்ளது போன்று மீண்டும் ஒருவரையொருவர் காணாதிருக்கலாம். ஆகையால் நாம் காணப்படவோ அல்லது கேட்கப்படவோ அல்ல, இந்த நோக்கத்திற்காகவே கூடி வந்திருப்போமானால்... 36 ஆனால் நாம் இந்த அற்புதமான ஆகாரத்தை இன்றிரவு பரிமாறியபோது, நாம் ஒருவருக்கொருவர் நம்முடைய ஐக்கியத்தைக் கொண்டிருந்தோம், மேஜையிலே, நாங்கள் எங்களுடைய சரீரங்களை போஷித்தபோது, இப்பொழுது தேவன் தம்முடைய மறைவான மன்னாவினால் எங்களுடைய ஆத்துமாவை போஷிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்துள்ள அந்த ஆசாரியர்களுக்கு மாத்திரமே அவருடைய ஆகாரம் புசிக்க அனுமதிக்கப்படுகிறது. 37. இன்றிரவு, நாம் கவனித்தால், நம்முடைய-நம்முடைய இறைச்சித் துண்டு நான் கூட்டங்களை நடத்திய எல்லா இடங்களிலும் இதுவரை நான் ஒரு- ஒரு விருந்தும் வைத்ததில்லை என்று நான் நினைக்கிறேன், இன்றிரவு அவர்கள் பரிமாறினபோது, எனக்கு அப்பேர்ப்பட்ட அருமையான மாமிசத் துண்டு இருந்தது. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், ஏனென்றால் நாம் இதை பெற்றுக்கொள்ள வேண்டிய தாயிருந்தது; நாம் ஜீவிப்போமானால், நாம் இந்த ஐக்கியத்தின் நேரத்தை அனுபவித்து மகிழ்ந்து, நம்முடைய ஜீவியங்களை ஆதரிக்கவும் ஏதாவதொன்று மரிக்க வேண்டியதாயுள்ளது. 38. அண்மையில், சைவ உணவு உண்பவர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடத்தில், “பாருங்கள், நான்- நான் உங்களுடன் இணங்கவில்லை” என்றார். பாருங்கள், அவர்— அவர் என்னை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பி ஒரு கடிதம் கொடுத்தார். மேலும் அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களை எப்பொழுதுமே ஒரு பரிசுத்த மனிதனாகவே கருதுகிறேன்” என்றார். அவர், “ஆனால் நீங்கள் காலை உணவாக பன்றி இறைச்சியும் முட்டையும் புசித்தீர்கள் என்று நீங்கள் கூறினதை நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி, “அது—அது என்னை நிலைகுலையச் செய்தது” என்றார். 39. பாருங்கள், அது, நான் அவருடைய பாதையில் தடைக்கல்லை வைக்கமாட்டேன். இப்பொழுது, அதுவே அவருடைய விசுவாசிக்கும் வழியாகும். ஆனால் நான், “பாருங்கள் ஐயா, நான் புசிக்கவில்லையென்றால், நான் உயிரோடிருக்க முடியாது” என்றேன். 40. அவர், "ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒரு பன்றியைப் புசித்து, ஒரு கோழியைக் கொல்ல வேண்டியதாயிருந்தது” என்றார். 41. நான், "ஐயா, நாம் மரித்த பொருளினால் மாத்திரமே ஜீவிக்கிறோம். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் காய்கறிகளைப் புசிக்கிறீர்கள். நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் அப்பம் புசித்தால், கோதுமை மரித்துப் போயிற்று. நீங்கள் தானியத்தைப் புசித்தால், தானியமானது மரித்துப் போய்விடும். நீங்கள் பீன்ஸைப் புசித்தால், அந்த பீன்ஸ் மரித்துப் போய்விடும்” என்றேன். 42. நீங்கள் எதைப் புசித்தாலும், நீங்கள் சரீரப்பிரகாரமாக மாத்திரமே ஜீவிக்க முடியும், ஏனென்றால் நீங்கள் ஜீவிக்கும்படியாக ஏதோஒன்று மரித்துவிட்டது. இப்பொழுது, நீங்கள் என்ன செய்தாலும், பால் குடித்தாலும் கூட, பாக்டீரியாக்கள், என்ன செய்தாலும், நீங்கள் மரித்த பொருளைக் கொண்டே ஜீவிக்க வேண்டும். நாம் இந்த இயற்கையான ஜீவியத்தை ஜீவிக்க வேண்டுமானால், மரித்த பொருளினால் மாத்திரமே அதைச் செய்ய முடியும், நாம் நித்தியமாக ஜீவிக்கும்படியாக ஏதோ ஒன்று மரிக்க வேண்டியதாயிருந்தது. அது இயேசு கிறிஸ்து, தேவன் நமக்காக ஒரு மீட்கும் பலியை அளித்தார். 43. இப்பொழுது, நான் முதலில் பெந்தேகோஸ்தே ஜனங்களை சந்தித்தபோது, நான்—நான் ஆற்றுக்கு அப்பால் உள்ள, இதனோடு இணைந்த மாநிலமான கலிபோர்னி யாவுக்குச் சென்றேன். நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தேன். இந்த புகழ்பெற்ற பெண் ஊழியக்காரியான திருமதி செம்பிள் காலத்தில் நான் வாழ்ந்ததில்லை...ஐமி செம்பிள் மெக்பெர்சன். நான் அவளுடைய மகன் ரோல்ஃப், ஒரு அருமையான கிறிஸ்தவ பெருந்தன்மையுள்ளவர், மற்றும் மற்றும் அவருடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்கள் நிச்சயமாகவே அருமையான ஜனங்கள், டாக்டர் டீஃபோர்ட் மற்றும் ஏஞ்சலஸ் ஆலயத்தில் பணிபுரியும் அநேகர். நான் பெந்தேகோஸ்தே யூபிலியை, ஐம்பது ஆண்டு யூபிலியை அங்கே பிரசங்கித்தேன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நிச்சயமாகவே ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. 44. எனவே இந்த ஸ்திரீயின் காரியங்களில், அவள் செய்தது போலவே, தன்னால் முடிந்தவரை முயற்சித்து, ஒரு மாதிரியாய்த் திகழ்ந்தாள், அவளுடைய இருதயத்தில் இருந்ததை அவளுக்கு அளிக்கும்படியாக, ஃபாரஸ்ட் லானில் உள்ள அவளுடைய கல்லறைக்குச் சென்று நான் அவளுக்கு ஒரு அஞ்சலியை செலுத்தினேன். நான் என்னுடைய தொப்பியைக் கழற்றிக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கையில், என்னுடைய தலையை வணங்கி, இந்த சிறிய பணிப்பெண்ணின் உன்னதமான வாழ்க்கைக்காக தேவனுக்கு நன்றி கூறினேன், அதன்பின்னர் என்னுடன் இருந்த குழுவினரால், ஒரு ஊழியக்கார குழுவினரால் என்னிடம் கேட்கப்பட்டது, நான் பாரஸ்ட் லான் வழியாக ஒரு பயணம் செல்ல விரும்பினால்...அங்குள்ள பிணவறையின் உட்புறத்தில் அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைத்தாலும், நான் வெவ்வேறு வடிவமைப்பை பார்த்துக் கொண்டிருந்தேன், கர்த்தருடைய இராபோஜனத்தைக் கண்டு, தரித்திருந்தேன். உங்களில் அநேகர் கடைசி இராபோஜனத்தை அதன் மேல் விளக்குகளை வைத்து, அதைக் குறித்த கதையைக் கேட்டபோது, அதைக் கவனித்திருப்பீர்கள். 45. ஆனால் நான் அங்கு கண்ட மிக தலைசிறந்த காரியங்களில் ஒன்றை, நீங்கள் வாசலுக்குள் நுழையும்போது, அது கிழக்குப் பக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஒரு— ஒரு மோசேயின் சிலை அமைக்கப்பட்டிருந்தது, அது மைக்கேல் ஆஞ்சலோவின் முழு ஜீவப் பணியாய் இருந்தது, அது சிற்பி என்று நான் நினைக்கிறேன்...நான் அந்த மனிதனை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம், அது சரியென்று நான் நினைக்கிறேன், மைக்கேல் ஆஞ்சலோ, அந்த—அந்த .இந்த மகத்தான சிற்பி, இல்லை, மோசேயின் சொரூபத்தை வடிவமைத்தவர். அவர் அதை விளக்கிக் கொண்டிருந்தபோது, அந்த—அந்த வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்று, மைக்கேல் ஆஞ்சலோ உருவாக்கிய மிகச் சிறந்த வேலைப்பாடுகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். அதற்கு அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி, கடின உழைப்பு தேவைப்பட்டது என்றும் கூறினார். 46. அப்பொழுது நான் கவனித்தேன், அது வலது முழங்காலில் இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்தச் சிலை சரியாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டது, மோசே தன்னுடைய கையில் நியாயப்பிரமாண பலகையோடும், தன்னுடைய நீண்ட தாடியோடும் காணப்பட்டான். நிச்சயமாகவே மோசே எப்படி காணப்பட வேண்டும் என்பது மைக்கேல் ஆஞ்சலோவின் மனோதத்துவ கருத்தாய் இருந்தது. ஒருக்கால் அப்படிப்பட்ட ஒரு படத்தைக் கூட ஒருபோதும் கண்டிருக்கவில்லை, ஆனால், அவர் தன்னுடைய சொந்த சிந்தையில், மோசே எப்படி காணப்பட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தானோ, அதை வரைந்தார். 47. அந்தக் கதை கூறுகிறபடி, அவர் சிலையை உண்டாக்கி முடித்தவுடனே, சரியாக முழுவதுமாக தேய்த்தவுடன், அவர் தன்னுடைய வேலையைப் பார்க்க பின்னால் நின்றார். அவர் ஏவப்பட்டபோது, அது தத்ரூபமானதாகக் காணப்பட்டது... அவர் தன்னுடைய சிந்தையில் கொண்டிருந்ததை, அவர் தன்னுடைய கரத்தினால் உண்டாக்கியிருந்தார். அது அதைப் போன்றே காணப்பட்டது, அவர் அநேக ஆண்டுகளாக அதற்காக காத்திருந்தார், அவர் அதை முழங்காலில் அடித்து, “பேசு!” என்று சத்தமிடுமளவிற்கு அவர் அவ்வளவாய் ஏவப்பட்டார். மோசேயின் முழங்காலில், ஒரு உடைந்த இடம் இருந்தது, மைக்கேல் ஆஞ்சலோ தன்னுடைய சுத்தியலால் அடித்த இடத்தில், ஏனென்றால் அவர் மிகவும் ஏவப்பட்டிருந்தார். 48. பாருங்கள், அவருக்குள் ஆரம்பத்தில் ஏதோ ஒன்று இருந்தது, மோசே எவ்வாறு காணப்பட வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார் என்பதைக் குறித்து ஒரு மனப்பூர்வமான சித்திரத்தை வரைந்திருந்தார். அது அவருக்கு முன்பாக பிரதிபலிப்பதை அவர் கண்டபோது, மோசே எவ்வாறு காணப்பட வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தாரோ; அவர் அந்த பெரிய கருங்கல்லைக் எடுத்தபோது, அந்த தரிசனத்தை அவருடன் பல ஆண்டுகளாக கொண்டிருந்தார், ஒரு துண்டை இங்கேயும், அங்கே ஒரு துண்டையும் சில்லுகளாக்கி, அதில் குறியிடலாம், ஏனென்றால் அது சரியாக வர வேண்டிய தாயிருந்தது. அது அவருக்கு முன்பாக முழுமையடைந்ததும், அவர்—அவர் தன்னுடைய சிந்தையில் இருந்ததன் பிரதிபலிப்பைக் கண்டார். அதனால்தான் அவர் அந்த சொரூபத்தின் மேல் அடித்து, “பேசு” என்று கூக்குரலிடும்படிக்கு ஏவப்பட்டார். அவருடைய எல்லா ஆண்டுகால உழைப்புக்கும் பலன் கிடைத்தது. அவருடைய மகத்தான கைவேலையானது முடிவுற்றிருந்தது. 49. இப்பொழுது நாம் அதைக் காண்கிறோம், நான்-நான் அதனால் ஏவப்பட்டு, ஏனென்றால் நான் அதை நினைத்தேன், உண்மையாகவே, காலில் இருந்த அடையாளமே, அது எனக்கு, என்ன, சிறந்த வேலைப்பாடு. ஏனென்றால், அது வேறொரு உருவப்படமாகவோ அல்லது மோசேயின் ஏதோ ஒன்றாய் இருந்திருந்தால், ஒரு மனிதன் ஒரு கருத்தரித்திருந்த ஒருவிதமான உருவத்தை உடையவனாயிருந்தார். ஆனால், அந்த வேலையைச் செய்து கொண்டிருந்த அந்த மனிதனுக்கு, அவர் அதைச் செய்யுமளவிற்கு அது அவருக்கு மிகவும் திருப்தியாயிருந்தது. அதிலுள்ள அடையாளம் அது எனக்கு சிறந்த வேலைப்பாடாக அமைந்தது, ஏனென்றால் மோசே எப்படி காணப்பட வேண்டும் என்ற அவருடைய சிந்தையில் இருந்ததை அது பரிபூரணமாக பிரதிபலித்தது. 50. ஓ, நான் அங்கே நின்றேன். அது அவருக்கு என்ன பொருட்படுத்தியிருக்க வேண்டும் என்பதைக் குறித்து—அதைக் குறித்து சிந்திக்க நான் ஒரு சில நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது, மேலும்—மேலும் அது அந்த நேரத்தில் எனக்கு என்ன பொருட்படுத்துகிறது என்பதை நான் அறிவேன். அப்பொழுது இதைக் குறித்து நான் உங்களிடத்தில் பேச வேண்டும் என்பது என் சிந்தையில் தோன்றியது. 51. இப்பொழுது நம்முடைய சிந்தனைகளை மைக்கேல் ஆஞ்சலோவிலிருந்து, மகத்தான சிற்பி, சர்வ வல்லமையுள்ள தேவனண்டைக்கு நாம் திருப்புவோமாக, அவர் ஆதியில் ஒரு நாள் அல்லது விடியற்காலத்திற்கு முன்னரே, ஒரு அணு அல்லது ஒரு மூலக்கூறு இருப்பதற்கு முன்பே, தேவன் தம்முடைய சிந்தையில், ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும், அவன் எப்படியிருக்க வேண்டும், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மனிதனை உடையவராயிருந்தார். அந்த மனிதன் தம்முடைய பாகமாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார், “ஆகவே அவர் தம்முடைய சொந்த சாயலில் மனிதனை உண்டாக்கி, தேவனுடைய சாயலில் மனிதனை சிருஷ்டித்தார்,” ஓ, தேவன் ஆதியில் இந்த சிறந்த வேலைப்பாட்டை உண்டாக்கினபோது, அது அவருடைய சிந்தனைகளை பிரதிபலித்தது. 52. நினைவிருக்கட்டும், ஒரே விதமான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, நம்முடைய...நம்முடைய பெயர்களும், நம்முடைய நினைவுகளும் கூட உலகத்தோற்றத்திற்கு முன்னமே தேவனிடத்தில் இருந்தன. ஏனென்றால் இப்பொழுது நாம் நித்திய ஜீவனை உடையவர் களாயிருக்கிறோம். அப்படி இருக்க, நாம் தேவனுடைய ஒரு பாகமாக இருக்க வேண்டும். நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்து, இந்த ஜீவியத்திற்கென்று முன்குறிக்கப் பட்டிருந்தபடியினால், நாம் அவருடைய சிந்தனைகளில் அவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும். வெளிப்படுத்தின விசேஷத்தின்படி, "உலகத்தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.” இப்பொழுது, தேவன் நம்மை தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தார், ஆகையால் நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம், ஏனெனில் அவர் நம்மிடம் பேசினார், நாம் ஜீவனுக்குள்ளாக வருகிறோம். ஒரு வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனையாகும். தேவன் நம்மை ஆதியிலே தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தார். 53. இப்பொழுது, அவர் ஆதாமை, அந்த முதல் மனிதனை உண்டாக்கினபோது, அது எவ்வளவு பரிபூரணமாயிருந்தது. அவன் தேவனைப் போன்று காணப்பட்டான். தேவன், மகத்தான பரிசுத்த ஆவியானவர், பூமியின் மேல் அசைவாடிக்கொண்டிருக்கிறார், அவர்...பறவைகள், மிருகங்கள், வெவ்வேறு காரியங்கள், மற்றும் அடைகாத்துக் கொண்டிருந்த ஒருவரின் ரூபத்தில் அது மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தது. கடைசியில், இனப்பெருக்கம் செய்துகொண்டிருந்த தேவனைப் போன்றே ஒரு இனம் தோன்றுமளவிற்கு உண்டானது. தேவன், இல்லை, மனிதன் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருந்தான். அதன்பின்னர், அவர் அவனை இந்த மகத்தான தோட்டத்தில் வைத்தபோது, மைக்கேல் ஆஞ்சலோ தன்னுடைய மகத்தான வாழ்க்கையின் கிரியைகளையும், எல்லா மகத்தான சிற்பிகளையும் கொண்டிருந்தது போலவே, தேவன் தம்முடைய கைவேலையை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார். தேவனும் கூட ஓய்ந்திருக்கும்படியாக அது அவருக்கு என்ன ஒரு-ஒரு- ஒரு முழுமையான திருப்தியாயிருந்தது. அது இளைப்பாறுதலில் இருந்தது. அவருடைய பணி முடிவுற்றிருந்தது. 54.அப்பொழுது சத்துருவைப் பற்றிய சோகமான கதை வருகிறது. இப்பொழுது கவனியுங்கள். தேவன் இந்த மனிதனுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுத்தார் என்ற இந்த ஒரு காரியத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் அவனுக்கு அளித்த...அவர் தம்முடைய வார்த்தையின் உட்புறத்தில் அவனை பலப்படுத்தினார், ஏனென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும், அவர்களால் செய்ய முடியாததை அவர் அவர்களிடம் கூறினார். 55. நாம் இன்றைக்கு என்ன செய்ய முடியும், நம்மால் செய்ய முடியாதவை என்ற அதே அடிப்படையின் பேரில் தான் நாம் பொருத்தப்பட்டிருக்கிறோம். நாம் எவ்வளவு நல்லவர்களா யிருந்தாலும், நாம் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும் அல்லது இதைச் செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நாம் மறுபடியும் பிறக்க வேண்டும். பார்த்தீர்களா? அது இருக்க வேண்டும். 56. தேவன் ஆதாமினால் என்ன செய்ய முடிந்தது, அவனால் என்ன செய்ய முடியாதிருந்தது என்பதைக் கூறினார். அவர் அவனை தம்முடைய வார்த்தையின் பின்னே வைத்தார். 57. அப்பொழுது சத்துரு வஞ்சகத்தினால் உள்ளே வந்து, தேவனுடைய வார்த்தையின் சுவர்களினூடாக ஊர்ந்து சென்று, அவனுக்கு வாசல் திறந்திருந்தபடியால், அவன் அந்த சொரூபத்தை பாவத்திற்கு கெடுத்துவிட்டான். அது மிகவும் சோகமான கதைகளில் ஒன்றாகும். 58. சிந்தித்துப் பார்க்க வேண்டுமானால், தன்னுடைய சிருஷ்டிகரின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன், அந்த வார்த்தை ஒருபோதும் தவறிப்போக முடியாதபடிக்கு, பின்னால் நிற்கும்படியான ஒரு சுவர் கொடுக்கப்பட்டது. அதுவே—அதுவே கிறிஸ்தவனுடைய நம்பிக்கையாயுள்ளது. அது அவனுடைய—அவனுடைய கேடயமாயிருக்கிறது. அது அவனுடைய ஆயுதம். வார்த்தைக்குப் பின்னால் தரித்திருப்பது, அது இன்றைக்கு அவனுடைய கன்மலையாயுள்ளது; ஒவ்வொரு விசுவாசிக்குமே. 59. இப்பொழுது, நீங்கள் ஒருபோதும் அதற்குப் பின்னால் இருந்து விலகி வரக்கூடாது. நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள், நீங்கள் சத்துருவுக்கு கதவைத் திறந்து கொண்டிருக்கிறீர்கள், அவர்கள், “ஓ, பாருங்கள், நீங்கள் இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் செய்யலாம்” என்று கூறும்போது, பாவம் என்று அழைக்கப்படுகின்ற ஒவ்வொரு காரியத்திலிருந்தும் நீங்கள் உங்களை பிரித்துக் கொள்ள தேவன் விரும்புகிறார். முற்றிலுமாக அவருக்காக உங்களை ஒதுக்கி வைத்திருங்கள், அவருக்காக மட்டுமே. 60. உங்களுடைய ஸ்தானத்தை பூமியின் மேல் உள்ள வேறு எவருமே எடுத்துக்கொள்ள முடியாது என்ற, ஒரு நோக்கத்தை, அவர் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உடையவராயிருக்கிறார். தேவன் உங்களுக்காக ஏதோ ஒரு காரியத்தை வைத்திருக்கிறார். நீங்கள் அந்தவிதமாக உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நோக்கத்திற்காகவே அந்தவிதமாகச் உண்டாக்கப்பட்டீர்கள். தேவன் தம்முடைய பணியில் இராஜாதிபத்தியமுள்ளவராயிருக்கிறார். அவர். காரியங்கள் வித்தியாசமாயிருந்தன. நாம் ஒருவரிடமிருந்து மற்றவர், வித்தியாசப்படுகிறோம். 61 நாம் மிருக ஜீவியத்தில் கவனிக்கிறோம். மிருக ஜீவியத்தில், ஒரே மிருகம் உண்டு என்பதை நாம் கண்டறிகிறோம், தேவன் ஒரு பாரம் சுமக்கும் மிருகத்தை உண்டுபண்ணினார், குதிரையைப் போல, மேலும்—மேலும் அது வேலை செய்ய வேண்டியதாயுள்ளது. பசுவானது ஒரு பலியாகும். ஆனால், சிங்கமும், புலியும் எந்தவித உழைப்பும் அல்லது வேறு எதுவுமின்றி காட்டில் சுற்றித் திரிகின்றன. அவர் யானையைப் போன்ற ஒரு பெரிய மிருகத்தை உண்டாக்கி, அதன்பின்னர் ஒரு எலியைப் போன்ற ஒரு சிறு மிருகத்தை உண்டாக்கினார். இப்பொழுது, என்ன செய்ய வேண்டும் என்றும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் தேவனிடம் கூறுவது யார்? அவர் அதை தம்முடைய சொந்த வழியில் செய்கிறார். 62. அவர் மலைகளை உண்டுபண்ணுகிறார். அவர் பாலைவனங்களை உண்டாக்குகிறார். அவரே சமுத்திரங்களை உண்டாக்குகிறார். அவர் சமவெளியை உண்டாக்குகிறார். அவர் ஒருவிதமான மரத்தை, கடினமான மரத்தை, பேரீச்சை, முதலியனவற்றை உண்டாக்குகிறார். அவர் அதைச் செய்கிறார். 63. அவர் மனிதர்களை வித்தியாசமாக்குகிறார். அவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான இடத்தை அளிக்கிறார். ஒரு பனைமரம் ஒருபோதும் ஒரு ஹிக்கரி மரமாக இருக்க முடியாது. ஒரு ஹிக்கரி மரம் ஒருபோதும் ஒரு பனையாக இருக்க முடியாது. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் வேறு எவருடைய ஸ்தானத்தையும் எடுக்க முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் தேவனுக்கு, தனிப்பட்ட நபராய் இருக்கிறீர்கள், தேவன் உங்களுக்காக ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அவர் உங்களை இவ்விதமாக உண்டாக்கினார். நீங்களோ, “அவர் ஏன் அதைச் செய்தார்?” என்று கேட்கலாம். அவர் இராஜாதிபத்தியம் படைத்தவர். அது அந்தவிதமாக இருப்பதற்கு அவர் ஒரு காரணத்தை உடையவராயிருக்கிறார். ஆனால் நாம் யாவரும் வார்த்தையினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டறிகிறோம். 64. பரலோகத்தில், நாம் வான மண்டலங்களைப் பார்க்கிறோம். ஒரு நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்திலிருந்து வித்தியாசப்படுகிறது என்று வேதம் கூறுகிறது. சீரியஸ் என்ற பிரகாசமான நட்சத்திரமும் மற்றும் வித்தியாசமானவையும் உண்டு. மேலும் செவ்வாய் மற்றும் வியாழன், அந்த வித்தியாசமான அனைத்தும், அவைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன. சந்திரனிலிருந்து சூரியனும், நட்சத்திரங்களிலிருந்து சந்திரனும் வித்தியாசப்படுகின்றன. தூதர்கள் உண்டு, அதைப் போன்றே, சேராபீன்களும், கேருபீன்களும் உண்டு, தூதர்கள், மகத்தான தூதர்கள் என்ற வகைகள் உண்டு. வரப்போகும் புதிய உலகத்திலும் கூட பூமியின் ராஜாக்கள் தங்களுடைய கனத்தை நகரத்திற்குள் கொண்டு வருவார்கள். 65. நாம் எப்பொழுதும் அந்தவிதமாகவே இருக்கப் போகிறோம். ஏனென்றால், தேவனானவர் ஓரே மாதிரியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள ஒரு இல்லம் அல்ல. அவர் பல வகைகளைக் கொண்ட தேவனாயிருக்கிறார். அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு வழியை உண்டுபண்ணுகிறார். ஆனால் தேவன் நம்மை உண்டாக்கின விதத்தில் நாம் அவரைச் சேவித்து, களிகூர்ந்து, அவருடைய வார்த்தைக்குப் பின்னால் தரித்திருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் தேவன் அதைச் செய்தார். 66.ஆனால் சத்துரு அந்த வார்த்தையினூடாக, இந்த, தேவனுடைய கைவேலைப்பாட்டை, அவன் அதை கெடுத்துவிட்டான் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுதும் அதைத்தான் அவன் செய்து கொண்டிருக் கிறான். அவன் அந்த கைவேலைப்பாடினூடாக நழுவிச் சென்று கொண்டிருக்கிறான், சத்துரு நம்மை உலக சபைகளின் ஆலோசனை சங்கமாக ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். மனிதன்... ஏன், மனிதனோ ஒருவரோடு ஒருவர் இணங்க முடியாமலிருக்கும்போது, நாம் எப்படி ஒரு முழு உலகத்தையும் ஒரு மனிதனோடு ஒத்துப்போகச் செய்யப் போகிறோம்? நீங்கள் அதைச் செய்தவுடனே... 67 நாம் இசைவாக காத்துக் கொள்ள வேண்டிய ஒருவரை நாம் உடையவர்களாயிருக்கிறோம், அதுதான் தேவன். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” அந்த வார்த்தை தேவனாகவே இருந்து வருகிறது, எப்பொழுதும் தேவனாகவே இருப்பார், ஏனென்றால் தேவன் வார்த்தையில் இருக்கிறார். தேவனுடைய குமாரன் என்னும் நபரில், “வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” 68. இப்பொழுது நாம் கண்டறிகிறோம், அவர் இந்த பெரிய பாழாக்குதலை கண்டறிந்த பிறகு, அது நீங்களும் நானுமாக இருந்திருந்தால், நாம் அந்த நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து, நாம் அந்தக் காரியத்தை உதைத்துத் தள்ளிவிட்டு, அதை அப்படியே விட்டுவிட்டிருப்போம், ஆனால், தேவன் அவ்வாறு அல்ல, அவர் தம்முடைய கிரியையை பாழாக்கிவிடச் சித்தமாயிருக்கவில்லை. அதுவே தேவனுடைய அன்பாயிருக்கிறது. புலவன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லை. நாம் சமுத்திரத்தை மையினால் நிரப்பி, ஆகாயங்களை தோல் காகிதமாக உபயோகித்தாலும்; பூமியிலுள்ள ஒவ்வொரு தண்டையும் ஒரு எழுதும் இறகாக்கினாலும், ஒவ்வொரு மனிதனையும் எழுதும் தொழில் அமர்த்தினால்; தேவனுடைய அன்பை எழுதுவது என்பது சமுத்திரத்தை உலரச் செய்யும்; அல்லது வானத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை படர்ந்துள்ள தோல் சுருள் தேவனுடைய அன்பு அனைத்தையும் கொள்ளுமா. 69. தேவனுடைய அன்பைப் பாருங்கள்! மனிதன் விழுந்துபோன பிறகு, சத்துருவுக்கு வேண்டுமென்றே கதவைத் திறந்த பிறகு, உள்ளே வந்து அவனைக் கெடுத்து, அவனுக்குள் மரணத்தை ஏற்படுத்தியிருந்தும், தேவன் அப்பொழுதும் இது தோற்கடிக்கப்பட சித்தமாயிருக்கவில்லை. அவர் கீழே வந்து மீண்டும் முழுவதுமாக தொடங்கினார். அவர் அந்த மனிதனை மீண்டும் உண்டாக்கப் போவதாயிருந்தார். 70. அவர் ஆதாமை “இதைச் செய், இதை அல்ல; இது, அது அல்ல; தொடாதே, கையாளாதே, ருசி பார்க்காதே” என்ற ஒரு உடன்படிக்கையின் மேல் வைத்தார். 71. ஆனால் அவர் மீண்டும் துவங்கினபோது, அவர் ஆபிரகாமுடன் துவங்கினார் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆபிரகாமில், அவர் ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையின் மேல் அவனை ஏற்படுத்தினார். “நீ செய்தால்” என்றல்ல. “நான் செய்து விட்டேன். நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன். நான் உன்னையும், உன்னையும், உனக்குப் பிறகு உன் சந்ததியையும் ஆசீர்வதித்திருக்கிறேன்.” அது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாயிருந்தது அவர் ஆபிரகாமுடன் துவங்கினார், மீண்டும் அவருடைய வேலைப்பாடு, இப்பொழுது அவருடைய நிபந்தனையற்ற உடன்படிக்கை. அதன்பின்னர், நாம் கண்டறியும்போது, அவர் ஆபிரகாமை அடிப்படையாகக் கொண்டு, வாக்குத்தத்தத்தோடு, நிபந்தனையற்ற உடன்படிக்கையை அவனுக்கு அளித்தார். 72. அதன்பின்னர் அவர் கோத்திரப் பிதாக்களிடம் வந்தார், நாம் படிக்கையில், பழைய ஏற்பாட்டில், அடுத்ததாக வருவோம். இங்கே அவர் தம்முடைய கிரியையின் அஸ்திபாரத்தை வெளிப்படுத்தினார். இப்பொழுது நாம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பை உடையவர்களாயிருக்கிறோம்; நான்கு கோத்திரப் பிதாக்கள். 73. இப்பொழுது, ஆபிரகாம் விசுவாச கிரியையை, விசுவாசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான், ஏனென்றால் ஆபிரகாம் ஒரு விசுவாசமாயிருந்தான். அவன் மகத்தான விசுவாசத்தை உடையவனாயிருந்தான், ஏனென்றால், “அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் இருந்தான்.” நாம், “யாவுமே எதிர்மறாக இருக்கிறது” என்று கூறும்போது, எல்லாமே அவனுக்கு எதிராக இருந்தாலும், அவன் இன்னமும் தேவனைப் பற்றிக் கொண்டிருந்தான். 74. ஆகையால் நமக்கு அன்பார்ந்த குமாரனாயிருந்த ஈசாக்கு, அன்பின் அடையாளமாக இருந்தான், ஏனென்றால், ஈசாக்கை பலியிட்டபோது, ஆபிரகாம் தேவனுக்கு ஒரு மாதிரியாயிருந்தான், ஆதியாகமம் 22, அவன் விறகுகளை மலையின் மேல் கொண்டு சென்றான் என்றும், ஒவ்வொரு காரியமும் கிறிஸ்துவை சித்தரித்து, அவருக்கு முன் நிழலிட்டது என்றும் நாம் கண்டறிகிறோம். அப்பொழுது அவனுக்குப் பதிலாக ஆட்டுக்கடா பலியிடப்பட்டது. இப்பொழுது அது விசுவாசமாயிருந்தது, அன்பாயிருந்தது. 75.யாக்கோபு, அதற்கு “எத்தன்” என்று பொருள், அவன் ஒரு வஞ்சகன். யாக்கோபின் ஜீவியம் உண்மையாகவே கிருபைக்கு அடையாளமாயிருந்தது என்பதை நாம் உணருகிறோம், ஏனென்றால் அது யாக்கோபுடன் எல்லா நேரத்திலும் தேவனுடைய கிருபையாயிருந்தது. 76. அதன்பின்னர் யோசேப்பு வந்தான். யோசேப்புக்கு விரோதமாக ஒன்றுமில்லை. அவன் பூரணப்படுத்தப்பட்ட ஒருவனாயிருந்தான். தேவனுடைய தீர்க்கதரிசி தன்னுடைய சகோதரர் மத்தியில் வந்தான். காரணமில்லாமல் வெறுக்கப்பட்டு, விற்கப்பட்டான். ஒவ்வொரு வழியிலும் அவனுடைய ஜீவியம் இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்திற்கு முன்நிழலாக இருந்தது. “தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு சாக்கடை குழியில் தள்ளப்பட்டு, மரித்துப்போனதாகக் எண்ணிக்கொண்டனர்; வெளியே எடுக்கப்பட்டு, பார்வோனின் வலது கரத்திற்கு உயர்த்தப்பட்டான். அவன் சிங்காசனத்தை விட்டுச் சென்றபோது, அவர்கள் எக்காளத்தை ஊதினார்கள், ஒவ்வொரு முழங்கால்களும், யோசேப்பை வணங்க வேண்டியதாயிருந்தது என்பதை, அறிந்திருந்தனர். 77. இயேசு ஏறக்குறைய யோசேப்புக்கு விற்கப்பட்ட அதே கிரயத்திற்கு விற்கப்பட்டார் என்பதை நாம் கண்டறிகிறோம். குழியிலிருந்து—மேலேயெடுத்து; பரலோகத்திற்கு ஏறிச் சென்று, தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் அந்த இடத்திலிருந்து வரும்போது, “எக்காளம் தொனிக்கும், முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அவருக்கு முன்பாக அறிக்கை பண்ணும்,” பரிபூரணம். அது விசுவாசம், அன்பு, கிருபை மற்றும் பரிபூரணமாயிருந்தது. 78 அதன்பின்னர் இந்த மகத்தான சிற்பத்தின் சரீர வேலைப்பாடுகள் தோன்றின. அவர் தீர்க்கதரிசிகளைக் கொண்டு சரீரத்தை கிரியை செய்யச் செய்தார். தீர்க்கதரிசிகள் சரீரத்தின் கிரியையாயிருந்தனர். 79 அதன்பின்னர் முடிவிலே இந்த மகத்தான சரீரத்தின் தலை வந்தது, அது கிறிஸ்துதாமே. எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து முன்னுரைத்திருந்தனர். எல்லா அஸ்திபார வேலைகளும் அவரைக் குறித்து முன்னுரைத்திருந்தன. ஏதேன் தோட்டம் முதற்கொண்டு, அவர் துவங்கின அதே நேரம் முதற்கொண்டு, “உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.” அவர் அங்கே தொடங்கி, கோத்திரப் பிதாக்கள் மூலமாக தீர்க்கதரிசிகளுக்குள்ளாக வந்து, அங்கே வெளியே வந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் மீண்டும் ஒருமுறை தம்முடைய சொந்த பிரதிபலிப்பைக் கண்டார், ஒரு மனிதன் பூமியில் ஒரு ஸ்திரீயின் வயிற்றிலிருந்து பிறந்தபோது, அது தேவனுடைய சிறந்த வேலைப் பாடாயிருந்தது. அது தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவாயிருந்தது. அவர் அவ்வாறிருக்கக் காரணம் என்னவெனில், அவர் பரிபூரண வார்த்தையாக இருந்தார். 80 "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” 81 இப்பொழுது அவருக்குள் ஒரு பரிபூரண சிறந்த வேலைப்பாடு பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். அவர், "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்க வேண்டாம். நான்...உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லையா? கிரியைகளை விசுவாசியுங்கள், ஏனென்றால் நான் யாரென்று அவைகள் உங்களுக்குச் சாட்சி கொடுக்கின்றன" என்று கூறும்படியாக, அவர் தேவனைப் போல், பரிபூரணமாக இருந்தார். நான் அதை விரும்புகிறேன். பார்த்தீர்களா? அவர், “நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையென்றால்...” என்றார். அவர்கள், “நீர் ஒரு மனிதனாயிருக்க, உம்மை தேவனுக்கு சமமாக்கிக் கொண்டிருக்கிறீர்” என்றனர். 82. அவர், "உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லையென்றால், நான் செய்கிற கிரியைகளை விசுவாசியுங்கள். என்னை அனுப்பினவருடைய கிரியைகளை நான் செய்யவில்லையென்றால், அப்பொழுது என்னை விசுவாசிக்க உங்களுக்கு உரிமையில்லை” என்றார். 83 எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனும், இன்றைக்கு, அதே சாட்சியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையில் நம்முடைய ஜீவியங்கள் தகுதியுள்ளதாய், வார்த்தை கூறியுள்ளதை சரியாக சந்திக்கவில்லையென்றால், நாம் மறுபடியும் பிறக்கவில்லை யென்றால், அப்பொழுது நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ள நமக்கு உரிமையில்லை. இயேசு மாற்கு 16-ல், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார். பார்த்தீர்களா? “அவைகள் தொடரலாம்; அவர்கள் செய்ய வேண்டும்; அவர்கள் அநேகமாக அவ்வாறு செய்வார்கள்” என்றல்ல. அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள். அந்த சிற்பிதான் நம்மை உண்டாக்கினார். அது வெட்டி எடுக்கப்பட்ட சபையாகும். அது—அதுதான் கிறிஸ்துவின் சரீரம். 84 இப்பொழுது அது அவரை பரிபூரணமாக பிரதிபலித்தது என்பதை நாம் கண்டறிகிறோம். சிற்பி இப்பொழுது தம்முடைய குமாரன், தேவன், இம்மானுவேல் என்று அழைக்கப்பட்ட அந்த சிறந்த வேலைப்பாட்டில் வார்த்தையை மீண்டும் பிரதிபலிக்கச் செய்தார். சற்று சிந்தித்துப் பாருங்கள், தேவன் தம்மை அங்கே அந்த சரீரத்தில், அடையாளங்காட்டும் வரை, ஒரு நபர் அவ்வளவாய் கீழ்ப்படிந்தார், அவர் அவ்வாறானார், அவரும் தேவனும் ஒன்றாகினர். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். நான் எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமாயிருக்கிறதைச் செய்கிறேன்." 85 இன்றைக்கு கிறிஸ்தவனுக்கு அதைப் போன்ற ஒரு சாட்சி இருக்க முடிந்தால் என்னவாகும்? நீங்கள் இங்கே யூமாவில், தெருவில் ஒரு சிறந்த வேலைப்பாடாக இருப்பீர்கள். நீங்கள் அங்கே சலவைத் தொட்டியின் பின்னால் ஒரு கழுவும் ஸ்திரீயாக இருந்தாலும், நீங்கள் இன்னமும் தேவனுக்கு ஒரு சிறந்த வேலைப்பாடாக இருப்பீர்கள், நீங்கள், "நான் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமானதைச் செய்கிறேன்” என்று கூற முடியும்போது, முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் கிரியை உங்களில் பிரதிபலிக்கிறதைக் காண முடியும். 86. அவர்கள் உருக்கும் கருவியை உடையவர்களாவதற்கு முன்பே, அந்த பழைய பொன், ஒரு காலத்தில், இருந்ததாகக் கூறப்பட்டது. அந்த...அவர்கள் வழக்கமாக தங்கத்தை எடுத்து, அதை அடிப்பவர், அரிசோனா அதன் இளமை பருவத்தில் இருந்தபோது, ஆரம்ப நாட்களில் இந்தியர்கள் இருந்தனர். அடிப்பவர் தங்கத்தில் தன்னுடைய சொந்த பிரதிபலிப்பை காணும் வரையில் அவர்கள் தங்கத்தை அடித்தார்கள். அவர்கள் அதிலிருந்து எல்லா இரும்பு பைரைட், களிம்பு, அழுக்கு எல்லாவற்றையும் அடித்து, அடிப்பவர் தன்னுடைய சொந்த பிரதிபலிப்பை ஒரு கண்ணாடியைப் போன்று காணும் வரை அடித்தார்கள். 87 இப்பொழுது, அதைத்தான் சுவிசேஷம் செய்கிறது. எனவே அநேக ஜனங்கள் புரட்டி அடிக்கப்படுகிறதை விரும்புகிறதில்லை. பாருங்கள், இன்றிரவு சபைக்கு தேவை என்னவெனில், ஒரு நல்ல, பண்டைய நாகரீகமான, பரிசுத்த ஆவியானவர் உலகத்திலிருந்தும், உலகத்தின் காரியங் களிலிருந்து வெளியேற்றுதல். இன்றிரவு பெந்தெகொஸ்தே யினருக்கு அதுதான் தேவைப்படுகிறது. அதுதான் இன்றிரவில் நம்முடைய இயக்கங்களுக்கு தேவையாயிருக்கிறது, முழு உலகமும் நம்மை விட்டு வெளியே எடுக்கப்படும் வரை, இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வரையிலான, ஒரு நல்ல, பண்டைய நாகரீகமான, பொன்னாக மாற்றும் அடியே. 88 இன்றிரவு இந்த சில ஜனங்களை இங்கே கிறிஸ்துவுக்கு முழுமையாகக் கருதப்பட்டு, தங்களுடைய ஜீவியங்களை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்துள்ளவர்களை நான் உடைவனாயிருக்கட்டும். என்னால், இந்த கைப்பிடி அளவைக் கொண்டு, இல்லை, சரியாகக் கூறினால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக, உலக சபைகளின் ஆலோசனை சங்கம் முழுவதுமே செய்ய முடிந்ததை காட்டிலும் தேவனால் இங்கே இந்த கைப்பிடி அளவுள்ள ஜனங்களைக் கொண்டு அதிகமாக செய்ய முடியும். ஒரு மனிதன் அவருடைய கரங்களில் முழுவதுமாக ஒப்புவித்தல், அவ்வளவுதான் தேவனுக்குத் தேவை. 89.ஆனால், நீங்கள் பார்க்கிறீர்கள், நாம் அமைதியாக இருக்க தயாராக இல்லை, அவர் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் அடித்து, இதைத் தட்டி, அதைத் தட்டி, இந்த கருத்தைத், அதையும், அதையும் தட்டிவிட்டு, இயேசு கிறிஸ்து நம்மில் பிரதிபலிப்பதற்கு. நாம் அநேக திரைப்படங்களைப் பார்க்கிறோம். நாம் அநேக தொலைக்காட்சிகளை வைத்துள்ளோம். சபையானது அதனுடைய ருசியை ஜனங்களிடம் இழந்துபோகும் வரையில், நாம் மற்ற அநேக உலகப்பிரகாரமான கேளிக்கைகளையும் பெற்றுள்ளோம். அது பரிசுத்த ஆவியானவர் வெளியே சென்று விட்டக் காரணத்தினாலேயாம், வேறெதோ ஒன்று உள்ளே வந்துள்ளது. அது உண்மை, நண்பர்களே. 90.பண்டைய நாகரீக பெந்தேகோஸ்தேயினரின் சாட்சிகளைக் குறித்தும், அவர்கள் எப்படி இரவு முழுவதும் ஜெபக் கூட்டங்களை நடத்தினர் என்பதையும் நான் கேள்விப்படுகிறேன். நம்முடைய தகப்பன்மார்களும், தாய்மார்களும், நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இரவு முழுவதும் ஜெபித்தனர். தெருவில் உள்ள, ஜனங்கள் அவர்களை வெறுத்தனர். இன்றைக்கு, ஒவ்வொருவரும் நம்முடைய தோளில் தட்டிக் கொடுக்கவில்லையென்றால், ஏன், நம்மோடு ஏதோக் காரியம் தவறாயுள்ளது என்று நாம் கருதுகிறோம். "எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ.” அவர் நிந்திக்கப்பட்டார், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டார், நாம் அவருடைய சாயலாயிருக்கிறோம். ஆமென். 91 இன்றைக்கு நமக்குத் தேவை என்னவெனில், சில உண்மையான, அசலான ஜெபக் கூட்டங்களே, பிரசங்க பீடத்திலிருந்து வாயிற்காப்போன் வரையிலும், முழு வீடும் தேவனால் சுத்தம் செய்யப்பட வேண்டும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம், அடிக்கிறவனின் சாயலை பிரதிபலிக்கிறது. அது உண்மை. 92. இந்த சிறிய சமுதாய சுவிசேஷத்தை நாம் பெற்றுள்ளோம், இந்த ஒருவரின் தோளில் தட்டிக் கொடுத்து, இந்த ஒருவரை ஒரு உதவிக்காரராக ஆக்கி, அந்த ஒருவரான ஒரு போதகராகவோ, அல்லது அதைப் போன்ற மற்ற ஏதோ ஒரு காரியமாக்க வேண்டும், இரண்டுமே அரசியல். ரோமாபுரியிலிருந்த, நிசாயாவிலும் சரியாக அதுதான் சம்பவித்ததா? நாம் அந்த காரியத்திலிருந்து விலகிச் செல்ல விரும்புகிறோம். மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தேகோஸ்தேக்கள் மற்றும் யாவரும், நாம் அதிலிருந்து வெளியேற வேண்டும். 93. அரசியல் என்பது சபையைச் சார்ந்ததல்ல. பரிசுத்த ஆவியானவர் சபையைக் ஆளுகை செய்ய வேண்டியவராயிருக்கிறார், யார் என்ற அரசியல் வாக்கெடுப்பு அல்ல. "தேவன் சபையில் சில அப்போஸ்தலர்களையும், சில தீர்க்கதரிசிகளையும், சில போதகர்களையும், சுவிசேஷகர் களையும், மேய்ப்பர்களையும் வைத்திருக்கிறார்.” அங்கே அவர்களுக்கு புருஷர்கள் வாக்களிக்கவில்லை. பரிசுத்த ஆவியின் அழைப்பினால் தேவன் அவர்களை அங்கே உள்ளே வைத்தார், ஜெபக் கூட்டங்கள், கரங்களை வைக்குதல், தேவனுக்கு முன்பாக தரித்திருத்தல். 94. ஆனால், இன்றைக்கு, அது தானே கிட்டத்தட்ட அரசியலைப் போலவே இருக்குமளவிற்கு நாம் நம்முடைய மார்க்கத்தைத் கிட்டத்தட்ட அரசியலைப் போன்றே சமூகமயமாக்கிவிட்டோம், நாம் அதை நம்முடைய ஸ்தாபனங்கள் அனைத்திலும் செயல்படுத்துகிறோம். நாம்...ஒன்று மற்றொன்றை சுட்டிக்காட்ட முடியாது. நாம் யாவரும் குற்றவாளிகளாயிருக்கிறோம். அங்கே நீங்கள் சில அசலான புருஷர்களையும், அசலான பெண்களையும் கண்டறிகிறீர்கள். ஆனால் தொல்லை என்னவெனில், நான் அதைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறேன், நாம் சிறுபான்மையினரின் தரப்பில், விசுவாசிக்க விரும்புகிற, தேவனுடைய வல்லமையை விரும்புகிற அசலான ஜனங்கள். ஒரு சமூகச் செயலால் கொண்டு வரப்பட்டவை ஏராளம், “சரி, இது ஒரு நல்ல மனிதன். அவர் ஒரு அருமையான நபர்” என்கின்றனர். 95. நமக்கு நல்ல சபைகள் உள்ளன. நாம் நல்ல சபைகளைக் கட்டுகிறோம், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த சபைகளைக் கட்டுகிறோம். அதெல்லாம் சரிதான். அதற்கு எதிராக ஒன்றுமில்லை. நான் சபை செழித்தோங்குவதைக் காண விரும்புகிறேன். 96. ஆனால், சகோதரனே, நான் உலகப்பிரகாரமான காரியங்களில் செழிப்படைவதைக் காட்டிலும் கர்த்தருடைய வல்லமையில் செழிப்படைவதையே காண விரும்புகிறேன். மீண்டும் சுவிசேஷத்திற்கு திரும்பி வாருங்கள்! தேவனுடைய வல்லமைக்குத் திரும்புங்கள்! பெந்தெகொஸ்தேக்கு திரும்பி வாருங்கள்...அந்த அசலானது இருந்ததைப் போல. ஆனால், நீங்கள் பாருங்கள், அதனுடைய தொல்லை என்னவென்றால், நாம் அந்த அடிப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. 97. நீங்கள் ஒரு காரியத்தைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தைக், அல்லது சபை செய்து கொண்டிருக்கிற ஏதோ ஒரு ஒழுக்கக்கேடான காரியத்தைக் குறித்து அல்லது சில சமுதாய காரியங்களைக் குறித்து கூறலாம், அப்பொழுது அவர்கள் உங்களை புறக்கணித்து, கதவுகளை மூடிவிடுவார்கள். நீங்கள் உள்ளே வர முடியாது, பாருங்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தி, உங்களை வெளியே தடை செய்கிறார்கள். அவர்கள் உங்களை இனிமேல் விரும்பவில்லை. அவர்கள், "நீ பைத்தியம். நீ உன்னுடைய புத்தியை இழந்துவிட்டாய்” என்கிறார்கள். ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும் வரை, எவரும் என்ன கூறினாலும் அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஒரு மனிதனை மாற்ற கிறிஸ்துவின் வல்லமை தேவைப்படுகிறது. ஒரு மனிதனை காத்துக்கொள்ள கிறிஸ்துவின் வல்லமை தேவைப்படுகிறது. 98. இயேசு ஒரு சமயம், “லீலி புஷ்பங்களைக் கவனியுங்கள். என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். சாலமோன் தன்னுடைய எல்லா மகிமையிலும் ஒரு-ஒரு மகத்தான காட்சியாயிருந்தான். சந்தேகமேயில்லை. அவன் உலகத்திற்கு ஒரு மகத்தான காரியமாய், தேவனுக்கு முன்பாக ஒரு மகத்தான மனிதனாயிருந்தான். ஆனால் சாலமோனின் வஸ்திரத்தில் ஜீவன் இருக்கவில்லை. அது ஒரு பொருளாக இருந்தது, ஒருவேளை செம்மறியாட்டின் முதுகில் கத்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் லீலிபுஷ்பம் ஜீவனை உடையதாயிருந்தது. 99. இன்றைக்கு நமக்கு தேவை என்னவெனில் நமக்குள்ளாக இருக்கிற கிறிஸ்துவின் ஜீவனே. அதுதான் சுத்திகரிக்கிறது; வெளிப்புறமாகவோ, கழுத்துப்பட்டையைத் திருப்பிக் கொண்டோ அல்லது ஒரு உளவியல் பட்டம் அல்லது ஏதோ ஒன்றையோ அல்ல. நாம் என்னவாயிருக்க வேண்டும் என்பதை நாம் உருவாக்க உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் சபையில் ஆளுகை செய்ய அனுமதிப்பதைத் தவிர தேவனுக்கு வேறெந்த திட்டமும் கிடையாது. 100. ஓ, தேவனே, அவரும் தேவனும் ஒன்றாகி விடுமளவிற்கு, அவர் அவ்வளவாய் தேவனுடைய சாயலில் இருந்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” ஓ, என்னே! தேவன் அவருக்குள் ஜீவித்தது என்ன ஒரு ஜீவனாயிருந்தது, அதாவது அவருடைய முழு ஜீவியமும் தேவனால் சுற்றப்பட்டிருந்தது. அது ஒரு சிறந்த வேலைப்படைப்பாய் இருந்ததில் வியப்பொன்றுமில்லையே! சாத்தான் அவரண்டை வந்தான். 101. ஒவ்வொரு முறையும் தேவன் ஒரு சிறந்த வேலைப்பாட்டை உடையவராயிருக்கிறார் என்று நினைத்தபோது, சாத்தான் உள்ளே நுழைந்தான். அவன் மோசேக்குள் பிரவேசித்து, அவன் கற்பனைகளை உடைத்துப் போட்டான். ஆனால் அவன் இந்த சிறந்த வேலைப்பாட்டிற்கு வந்தபோது, அது தேவனுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலாயிருந்தது. ஆமென். அவர்— அவர் அவரை முன்நியமித்திருந்தார். அது அவனுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் தேவனுக்கு உண்மையாய் தரித்திருந்தார், தேவன் அவரை நோக்கிப் பார்த்தபோது, மோசேயைப் போல அவர் வனாந்திரத்தில் நாற்பது நாட்கள் சோதிக்கப்பட்டதைக் கண்டார். உண்மையாகவே, அந்த மனிதர் யாவரும் அவருக்கு முன்னடையாளமாக நிழலிடப்பட்டிருந்தனர். நியாயப் பிரமாணம் மீறப்பட்டது. ஆனால் அவன், அந்த மகத்தான சோதனைக்காரனாகிய, சாத்தான் வந்து, அவரை சோதிக்க முயன்றான், அவன் மோசேயை அங்கே காணவில்லை என்பதை அவன் கண்டறிந்தான். இல்லை ஐயா. அவன் ஒரு ஐந்தாயிரம் வாட் மின்னழுத்தத்தின் தாக்கத்தினால், அவன் அந்த ஒன்றிற்கு எதிராக குதித்தபோது, தன்னுடைய சிறகுகளை தீய்த்து கருக்கிக் கொண்டான். 102 அவர், “எழுதியிருக்கிறதே” என்றார். பார்த்தீர்களா? ஆதாம் விழுந்து போனான். ஆனால், இரண்டாம் ஆதாமாகிய, இயேசு, மீட்பராக வந்திருந்த அந்த சிறந்த வேலைப்பாடு, அவர், "“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று எழுதியிருக்கிறதே” என்றார். அவர் ஒரு சிறந்த வேலைப்பாட்டை உடையவராயிருந்தார். ஆம், ஐயா. அவர் இன்னொன்றையும் கூறினார். அவன், ""உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக' என்றும் எழுதியிருக்கிறதே.' அப்பாலே போ, சாத்தானே” என்றார். ஒரு சிறந்த வேலைப்பாடு இருந்தது. அவர் என்ன செய்தார்? 103. “நான் என்னுடைய சபைக்கு கூறுவேன். நான் சபை போதகர்களை இன்னின்னதைச் செய்ய வைப்பேன். பேராயர் இன்னின்னதைச் செய்வார்” என்று கூறவில்லை. 104. அதற்கு அவர், "எழுதியிருக்கிறதே” என்றார். அந்தவிதமாகத்தான் அவர் தம்முடைய முதல் ஆதாமை வார்த்தைக்கு பின்னே வைத்தார், அவன் விழுந்துபோனான், சாத்தான் அதை அழித்துப்போட்டான். ஆனால் அவன் என்ன செய்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவனால் இந்த ஒருவரைக் கெடுக்க முடியவில்லை. அவ்வளவுதான், அவர்... 105 தேவன், "இவர் என்னுடைய நேச குமாரன். அவருக்கு செவிகொடுங்கள். ஒவ்வொரு காரியத்தையும், நான் எல்லாவற்றையும் அவரிடத்தில் அளிக்கிறேன். நீங்கள் அவருக்கு செவி கொடுங்கள்” என்றார். அவர்கள் ஒன்றாயிருந்தனர். அவர்கள் ஒரே ஒருவராய் இருந்தனர். தேவன் அவருக்குள் ஜீவித்து, அவரை தேவனாக, இம்மானுவேலாக, பூமியில் ஆக்கினார். அவர் ஒரு பரிபூரண ஆட்டுக்குட்டியாயிருந்தார், ஓ, மீட்பின் பரிபூரண சிறந்த வேலைப்பாடாயிருந்தார். அது மைக்கேல் ஆஞ்சலோவைப் போலவே, தேவனுக்குப் பிரியமாயிருந்தது, அவர் தம்முடைய ஜீவியத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டார். நாம் அதில் காண்கிறோம்... 106 நான் இங்கே வேத வாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன். மாற்கு 9:7-ஐ நீங்கள் வாசிக்க விரும்பினால்...அது மறுரூப மலையாகும். அவர் அங்கே மறுரூப மலையின் மேல் இருந்தபோது, அங்கே மோசே தரிசனமானார் என்றும், அங்கே எலியா தோன்றினார் என்றும் நாம் கண்டறிகிறோம். 107 அதன்பின்னர், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அப்போஸ்தலனாகிய பேதுரு, “நாம் இங்கே மூன்று கூடாரங்களைக் கட்டுவோம். நாம் இதிலிருந்து மூன்று ஸ்தாபனங்களை உருவாக்குவோம். நாம் மூன்று ஸ்தாபனங்களை உண்டாக்குவோம்: ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்கும், மற்றொன்று உமக்கும்” என்று கூறுமளவிற்கு ஏவப்பட்டான். 108 அவர் பேசிக்கொண்டிருக்கையில், அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அது, “இவர் என்னுடைய நேசகுமாரன். நான் அவர் பேரில் மிகவும் பிரியமாயிருக்கிறேன், உங்களுக்காக நான் அவரை அடிக்கப் போகிறேன். அவருக்கு செவிகொடுங்கள். அவர் பேசப் போகிறார்” என்றது. 109 "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” அவர் ஒரு ஆட்டுக்குட்டியாக, தேவ ஆட்டுக்குட்டியாக, பரிபூரண பலியாக இருந்தார். அவரைப்போன்று வாழ்ந்தவர் எவருமே இருந்ததேயில்லை, அவரைப்போன்று வாழ்ந்தது முதற்கொண்டு எவருமே இருந்ததேயில்லை. அவர் தேவனுடைய வார்த்தையோடு சரியாக பொருந்திய பரிபூரண சிறந்த வேலைப்பாடாயிருந்தார். 110 தேவன் துவக்கத்தில் தம்முடைய வார்த்தையை, இந்த நேரத்தின் ஒரு பகுதியை, அந்தப் பகுதிக்காக, அந்தப் பகுதிக்காக அளித்தார். 111 அங்குதான் மனிதர்கள் இன்றைக்கு வஞ்சிக்கப்பட்டு குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சம்பவித்த ஒரு காரியத்தின் பேரில் கட்டியெழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்...அது அந்த காலத்திற்காக அளிக்கப்பட்டது. 112 மோசே ஏனோக்கின் செய்தியோடு வருவது என்ன நன்மையைச் செய்திருக்கும்? மோசே நோவாவின் செய்தியோடு வருவது என்ன நன்மையைச் செய்திருக்கும்? மோசேயின் செய்தியோடு இயேசு வருவதனால் என்ன பயன்? பார்த்தீர்களா? வெஸ்லி லூத்தரின் செய்தியைக் கொண்டு வருவது என்ன பயன்? பெந்தெகொஸ்தேயினர் வெஸ்லியின் செய்தியைக் கொண்டு வருவது என்ன நன்மையைச் செய்திருக்கும்? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 113 அவை யாவும் இங்கே வேதாகமத்தில் குறியிடப்பட்டுள்ளன, நாம் காலத்தையும், நேரத்தையும், நமக்கானது என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் அங்குதான் தவறிக்கொண்டிருக்கிறோம். நாம் வேதாகமத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருக்கிறோம். இதுவே நாம் ஜீவிக்க வேண்டிய நாளாயுள்ளது. இந்த நாளிலே தேவன் நம்மை இங்கே வைத்திருக்கிறார். நாம் வார்த்தையில் பார்ப்போம். 114. அந்தவிதமாகத்தான் அந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், ஏரோதியர்களும் அக்காலத்திலிருந்த பல்வேறுபட்ட ஸ்தாபனங்களும் தாங்கள் கொண்டு இருந்த நோக்கத்தினால், மிகவும் உறுதியாக இருந்து, இயேசுவை பார்க்கத் தவறுகிறார்கள், தப்பித்துக் கொள்ள வழியே இல்லை என்று அவர்கள் எண்ணினர், ஆனால் அவர் வந்தபோது, அவர் முற்றிலுமாக, அவர் நினைத்திருந்த எல்லாரிலிருந்தும் வித்தியாசமானவராயிருந்தார். அவர் ஒரு எளிய, ஒரு முன்னணையில் பிறந்த ஒரு தாழ்மையான நபராய், ஒரு... முறைதவறிப் பிறந்த பிள்ளையாகக் கருதப்பட்டு, அதைப் போன்ற இந்த எல்லாக் காரியங்களோடும் இருந்தார். 115. ஆனால், அதே சமயத்தில், அவர் வருவார் என்று வேதம் கூறினவிதமாகவே அவர் வந்தார். மோசே கூறினதற்கு அவர்கள் பழக்கப்பட்டிருந்தனர், மோசே அவரைக் குறித்துப் பேசினான். அவர், “பாருங்கள், நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னையும் அறிந்திருப்பீர்கள். மோசே என்னைக் குறித்துப் பேசினான்” என்றார். அப்பொழுதும் அவர்களால் அதைக் காண முடியவில்லை. அவர்கள் அதைக் காண முடியாத அளவிற்கு தங்களுடைய பாரம்பரியங்களில் அப்படியே திரிக்கப்பட்டி ருந்தனர். ஆனால், நீங்கள் பாருங்கள், அந்த நாளின் ஸ்தாபனங்களைப் பிரதிபலிக்க அவர் வரவில்லை. அவர் மதவாதத்தை பிரதிபலிக்க வரவில்லை. 116. அவர் பிதாவை பிரதிபலிக்க வந்தார், பிதா வார்த்தையாயிருந்தார். ஆமென். இப்பொழுது நான் பக்திப் பரவசமடைகிறேன். அவர் பிதாவின் வார்த்தையை பிரதிபலிக்க வந்தார். அவர் அங்கிருப்பார் என்று தேவன் கூறினார், அங்கே அவர் தேவனுடைய மகத்தான கைவேலையின் பரிபூரண சிறந்த வேலைப்பாடாயிருந்தார். ஓ, என்னே! அவர் அவருடைய பரிபூரண பிரதிபலிப்பாயிருந்தார். தேவன் உரைத்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் பிரதிபலித்தார். ஆதாம் அவரைக் குறித்து என்ன கூறினானோ அதை அவர் பிரதிபலித்தார். தீர்க்கதரிசிகள் கூறின எல்லாவற்றைக் குறித்தும், கோத்திரப் பிதாக்கள் கூறின எல்லாவற்றைக் குறித்தும் அவர் பிரதிபலித்தார். அவர் கூறின ஒவ்வொரு காரியமும், அவர் வார்த்தையின் நிறைவேற்றமாயிருந்தார். எல்லாவிதமான காரியங்களும் அவருக்குள் நிறைவேறின. ஆம். அவர் புதிய ஏற்பாட்டின் யேகோவாவானார். அவர் பழைய ஏற்பாட்டின் யேகோவாவாயிருந்தார். “அப்போது வார்த்தை,” அக்கினி ஸ்தம்பத்தில் இருந்த அந்த வார்த்தையானது, "வெளிப்படுத்தப்பட்டு, நமக்குள்ளே வாசம்பண்ணப்பட்டது." பழைய ஏற்பாட்டின் யேகோவா புதிய ஏற்பாட்டின் இயேசுவானார். அவர் தேவனுடைய ஒரு பரிபூரண பிரதிபலிப்பாய் இருந்தார். 117 ஓ, பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் விழுந்தபோது, இன்றைக்கு சபையானது அந்த முதல் சபையை பிரதிபலிக்க முடிந்தால் நலமாயிருக்குமே! இன்றைக்கு கிறிஸ்தவனால் பிரதிபலிக்க முடிந்தால் நலமாயிருக்குமே! அவர்கள் என்னவாயிருந்தனர் என்பதற்கு நாம் ஒரு கலப்பின கூட்டமாயிருக்கிறோம். 118 நான் கடந்து வந்தேன், இன்று வருகிறேன், நான் இங்கே இந்த சிறிய காசா கிராண்டே ஒன்றில் அல்லது இங்கே இந்த சிறிய இடங்களில் சிலவற்றின் அருகில் வந்து கவனித்துக் கொண்டிருந்தேன், அங்கு ஒருஒரு பருத்தி பண்ணை இருந்ததையும், வித்தியாசமான உயர்ரக புற்களையும் நான் கவனித்தேன். அது தொடர்ந்து வளர, தண்ணீரை இறைக்க, அவர்கள் அங்கு காற்றாலைகளை கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. ஏன்? அது அங்கு சேர்ந்தவை அல்ல. நிச்சயமாக இல்லை. ஆனால், பழைய கற்றாழையைப் பாருங்கள், ஐந்து ஆண்டுகளாக மழை பெய்யவில்லை யென்றாலும், அது உயிர் வாழும். ஆனால் இதற்கு நீங்கள் ஒரு சில நாட்கள் தண்ணீர் ஊற்றத் தவறினால், அது மரித்துப் போய்விடும். நீங்கள் பாருங்கள், அது அசலானது அல்ல. 119 அந்தவிதமாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் குழந்தையாக இருக்க வேண்டும், சபையில் பெரிய காட்சிகளை உண்டாக்கி, தட்டிக் கொடுத்து, இதை, அதை, அல்லது மற்றதை அழைத்தோம். 120 சரி, ஆதி கிறிஸ்தவர்கள் கரடுமுரடானவர்களாக இருந்தனர். அவர்களுடைய முதுகில் யார் தட்டிக் கொடுத்தாலும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவை அதிகமாக பிரதிபலித்ததால் அவர்கள் சொன்னார்கள்...அவர்கள்—அவர்கள் அறியாதவர்களாகவும், கற்காதவர்களாகவும் இருந்ததாக அவர்கள் கருதினர். அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லவில்லை, அவர்கள் ஒரு கல்லூரிப் பட்டத்தையும் பெற்றிருக்கவில்லை. “ஆனால் அவர்கள் இயேசுவோடு இருந்ததை அறிந்திருந்தனர்.” இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு, நீங்கள் இயேசுவோடு இருந்து வருகிறீர்கள் என்பதை கவனியுங்கள், அதுதான் அவர்களுக்குத் தேவை. உங்களைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு, அது வித்தியாசமானது. நான் அறிவேன் அது...அது செல்வாக்கற்ற ஒரு காரியம், ஆனால் நாம் புகழுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் எளிதான ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. 121 அநேக ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய சபையில் இருந்த ஒரு வயோதிக சகோதரி, நின்று கொண்டு பாடலை பாடினார்: மற்றவர்கள் பரிசை வெல்வதற்காக சண்டையிடுகையில், இரத்தம் தோய்ந்த சமுத்திரத்தினூடாக பயணித்திருக்க, எளிதான மலர் படுக்கையில், நான் பரலோக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமா? இல்லை, நான் அரசாள வேண்டுமானால் நான் சண்டையிட வேண்டும். 122. நீங்கள் இங்கிருந்தால் என்ன செய்வீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், எல்லாமே இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக இருந்தால், நீங்கள் அவருடைய நாட்களில் வாழ்ந்திருந்தால். என் சகோதரனே, சகோதரியே, நீ அங்கே வசித்துக் கொண்டிருக்கிறாய். அது உண்மை. அவர் இன்னமும் வார்த்தையாயிருக்கிறார். இன்றைக்கு அவர்கள் அதை எப்படி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் அதை எப்படி ஸ்தாபனமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், அதை இணைக்கவும், அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்தையும், உலகத்தோடு இணைக்கின்றனர். தனித்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவும் உங்களுடைய—உங்களுடைய நிலைப்பாட்டை எடுங்கள். ஒன்றுமே அதை தடை செய்ய வேண்டாம். அதனோடு சரியாக தரித்திருங்கள். 123. அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அரிசோனாவிற்கும் கலிபோர்னியாவிற்கும் வழக்கமாக இங்கு வந்திருந்த அந்த பண்டைய சீன சலவைக்காரனைப் போல. அவனால் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. அவன் அதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் உங்களுடைய சலவைகளை அவனிடம் கொண்டு செல்கிறீர்கள். அவன் என்ன செய்வான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் சிறு காகிதத் துண்டுகளை வைத்திருந்தான், அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை. அவன் அந்த காகிதத்தை கிழித்து ஒரு துண்டை உங்களுக்கு கொடுப்பான். நீங்கள் திரும்பி வரும்போது, அந்த துண்டு காகிதம் அவனுடைய துண்டு காகிதத்துடன் பொருந்த வேண்டும், இல்லையென்றால் நீங்கள் உங்களுடைய சலவையை பெற்றுக்கொள்ள முடியாது. அதுவே முற்றிலும் மேலானதாக இருந்தது. நீங்கள் ஒரு பெயரை நகலெடுக்க முடியும், ஆனால் நீங்கள் அவனை அங்கே ஏமாற்றப் போவதில்லை, ஏனென்றால் அந்த காகிதத் துண்டு மற்ற காகிதத் தூண்டோடு சரியாக பொருந்த வேண்டும். 124. அந்தவிதமாகத்தான் தேவன் தம்முடைய உடன்படிக்கையையும் கூட செய்தார். நம்முடைய அனுபவம் ஏதோ ஒரு பிரமாணத்தோடு, ஏதோ ஒரு கோட்பாட்டோடு, ஏதோ ஒரு சபை ஸ்தாபனத்தோடு அல்லாமல், அது தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவோடு பொருந்த வேண்டும். சரி. நாம் கிறிஸ்துவண்டை வரும்பொழுது, அப்பொழுது கிறிஸ்து நம்மை உரிமை கோருகிறார். அவர் கல்வாரியில் அவரை இரண்டாகக் கிழித்தார். அதன் ஒரு பாகத்தை அவர் உயர்த்தி, அவருடைய வலது பாரிசத்தில் உட்கார வைத்தார், அது சரீரம். ஆவியானவர் வந்து, அவருக்காக ஒரு மணவாட்டியை உண்டுபண்ணும்படி இங்கே திருப்பி அனுப்பினார். கிறிஸ்துவுக்குள் இருந்த அதே அனுபவம் நமக்குள் இருக்க வேண்டும். 125. அவர்—அவர் சிற்பியை பிரியப்படுத்துமளவிற்கு அவர் முற்றிலும் பரிபூரணமாயிருந்தார், அவர் அவரை கல்வாரியிலே வெட்டி வீழ்த்துமளவிற்கு அவரை மிக அதிகமாக ஏவினார். ஓ, என்னே! இப்பொழுது வேதம் கூறியுள்ளபடி நாம் அவரைக் காண்கிறோம், தேவனுடைய சிறந்த வேலைப்பாடு. "நாம் அவர் தேவனால் அடிக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டதைக் காண்கிறோம்.” அதுதான் உண்மையான சிறந்த வேலைப்பாடு. ஆஞ்சலோ தன்னுடையதை அடித்தபோது, அதுதான்... 126. அவர் ஒரு நல்ல ஜீவியம் ஜீவித்திருந்திருந்தால், அவர் இன்றைக்கு சமுதாய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் சிலரைப் போல இருந்திருந்தால், “அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார்.” அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார், ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். அவர் தேவனாயிருந்தார். அவர் இம்மானுவேலாயிருந்தார். 127. இப்பொழுது தேவன் அவரை அடித்த காரணத்தால், சரியாக, எனக்கும் உங்களுக்கும், அந்த—அந்த சிறந்த வேலைப்பாடாயிருக்கிறார். அவர் அவரை கல்வாரியிலே அடித்தார். அவர் அடிக்கப்படாமலிருந்திருந்தால்..எத்தனை மரித்தோரை அவர் உயிரோடு எழுப்பியிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர் எவ்வளவு மகத்தாக பிரசங்கித்திருந்தார் என்றும், அவருடைய மகத்தான ஜீவியம் என்னவாயிருந்தது என்றும், அவருடைய உரிமைகோரல்கள் என்னவாயிருந்த னென்றும், அவர் அங்கே நிரூபிக்கப்பட்டார். அவர் மிகவும் பிரியமாய் இருந்தபடியால், தேவனால், மற்றவர்களுக்காக அவர் அடிக்க முடிந்த ஒரே மனிதனாய் அவர் பூமியின் மேல் இருந்தார். அந்த பரிபூரண ஒருவர் குறையுள்ளவர்களுக்காக அடிக்கப்பட்டார். ஆதாம் மூலமாக, விழுந்து போயிருந்த முழு சிருஷ்டியும், இயேசு கிறிஸ்துவினூடாக மீட்கப்பட்டது. தேவனுடைய சிறந்த வேலைப்பாடு சோதனையில் நின்றுள்ளது. அவர் அதை எப்படி செய்தார்? வார்த்தையின் மூலம். ""மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று எழுதியிருக்கிறதே” என்றார். 128. ஓ, கிறிஸ்தவ நண்பனே, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள். நீங்கள் நின்று கொண்டிருக்கிற ஏதோ ஒரு, அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டைக் குறித்த ஒரு சிறு கருத்துடன் பின்னால் நிற்க வேண்டாம். நம்முடைய கர்த்தர் செய்ததுபோல, நீங்கள் சத்துருவுடன் யுத்தம் செய்யப் போகும்போது, தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். மிக பலவீனமான கிறிஸ்தவன் கூட வார்த்தையைக் கொண்டு எப்படி சாத்தானை தோற்கடிக்க முடியும் என்பதை அவர் காண்பித்தார். அவர் வல்லமைகளை உடையவராயிருந்தார், அவர் விரும்பின எந்த வழியிலும் சாத்தானை அடித்திருக்க முடியும், ஆனால் அவர் அதை உபயோகிக்கவில்லை. அவர் வார்த்தையை எடுத்து, அதனால் அவனை தோற்கடித்தார். “அது எழுதப்பட்டிருக்கிறதே. அது எழுதப்பட்டிருக்கிறதே.” எல்லா இடங்களிலும், "அது எழுதப்பட்டிருக்கிறதே.” எனவே அவர் தேவனுடைய வார்த்தையினால் சாத்தானை தோற்கடித்தார். 129 இப்பொழுது, அது ஒரு பரிபூரண சிறந்த வேலைப்பாடாயிருந்தது, தேவன் அதை அடித்தார். அது என்னே ஒரு உதாரணமாக இருந்தது! என்னே ஒரு உண்மையான காரியம்! அங்கே மைக்கேல் ஆஞ்சலோவின் சிற்பம், மோசேயின் காலில் அடிக்கப்பட்டதைக் குறித்து பேசுகிறீர்களா? வேதம், “இந்த மனிதன் எல்லா மனிதருக்கும் மேலாக சிதைக்கப்பட்டார். அவர் ஒரு மனுஷ புத்திரனைப் போன்று காணப்படாத அளவிற்கு அவர் மிக அதிகமாக சிதைக்கப்பட்டார். அவர் அடிக்கப்பட்டார். அவர் நொறுக்கப்பட்டார். அவர் இரத்தம் தோய்ந்திருந்தார். அவன் வாரினால் அடிக்கப்பட்டிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்... செய்ய முடிந்த ஒவ்வொரு காரியமும். அவர் ஒரு—வெறும் ஒரு பெரிய இரத்தக் குவியலையும் எலும்புகளையும், ஒன்று சேர்த்து நடத்துவது போன்று காணப்பட்டார். அவர் கல்வாரியின்டை அதை இழுத்துச் சென்றபோது, அவர் ஒரு மானிட இனத்தைப் போன்று காணப்படவில்லை. தேவன் நமக்காக அவரை அடித்தார். அதுவே அவரை பரிபூரண சிறந்த வேலைப்பாடாக ஆக்குகிறது. 130 ஓ, அவர் எனக்காக அதைச் செய்தார் என்பதை அறிந்து, அவர் உங்களுக்காக அதைச் செய்தார் என்பதை அறிவேன், நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன். எப்படி நம்மால்—எப்படி நம்மால் அதற்கு இணையாக முடியும்? எவருமே அதற்கு இணையாக முடியாது. அதற்கு ஈடாக எவருமே தகுதியற்றவர்கள். நாம் இங்கே நம்பிக்கையில்லாமல் இருந்தோம். நாம் தேவனற்றவர்கள். நாம் மீட்பிற்கான எந்த வழியுமே இல்லாதவர்களாயிருக்கிறோம். பாலுணர்ச்சியில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் அதற்கான கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் பரிபூரணமானவராக வந்து, தேவன் உங்களுக்காகவும் எனக்காகவும் அவரை அடிக்கும் அளவுக்கு மிகவும் பரிபூரணமாகவும், மிகவும் பிரியமாகவும் இருந்தார். 131 இப்பொழுது, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவன் அவரை ஒரு சிறந்த வேலைப்பாடான மணவாட்டியாக வெட்ட முயன்று வருகிறார், அது ஒரு சபையாக அழைக்கப்படுகிறது. அது உண்மை. தேவன் அதை எப்படி செய்கிறார்? அவர் தம்முடைய ஒருபோதும் மாறாத முறையான வார்த்தையினால் அதைச் செய்கிறார். தேவன் தம்முடைய முறையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. யாராகிலும், உங்களால் முடியும். நீங்கள் மாறுங்கள். நான் மாறுகிறேன். காலம் மாறுகிறது. உலகம் மாறுகிறது. ஆனால் தேவன் மாறுகிறதில்லை, அவர் பரிபூரணமாய் இருக்கிறார். அவர் மாறுகிறதில்லை. அவர் முதல் முறையாக எந்தக் காரியத்தையும் செய்கிற விதமாகவே, அவர் அதை ஒவ்வொரு முறையும் அதேவிதமாகவே செய்கிறார். 132 அவன் மனந்திரும்பின காரணத்தால் அவர் ஒரு முறை மனிதனை இரட்சித்தார். அந்தவிதமாகவே அவர் மீண்டும் மனிதனை இரட்சிப்பார். அவன் விசுவாசத்தை உடையவனாயிருந்த காரணத்தால் அவர் ஒரு மனிதனை சுகப்படுத்தினார். அதே அடிப்படையில் அடுத்தவர்களை அவர் சுகப்படுத்துவார். அவர் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுகிறதில்லை, ஏனென்றால், பாருங்கள், அவர் இராஜாதிபத்தியமுள்ளவர், அவர் நித்தியமானவராயிருக்கிறார். அவர் முடிவற்றவர், சர்வ வியாபி, சர்வமும் அறிந்தவர். அவர் தேவனாயிருக்கிறார். ஆகையால் அவர் யாரிடமும் ஞானத்தைக் கேட்க வேண்டியதில்லை. அவர் அதிகமாகக் கற்றுக்கொள்ளும் வரை அவர் காத்திருக்க வேண்டியதில்லை. அவனுக்கு ஒரு புதிய பட்டம் தேவையில்லை. அவர் பரிபூரணமானவர். அவர் எந்தப் பட்டம் பெற்றாலும், அவர் முதலில் என்ன செய்தாலும், அவருடைய முதல் தீர்மானம் என்றென்றும் மாறாததாய் இருக்கிறது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது. ஓ, நான் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன்! 133 அவர் தம்முடைய முதல் சிறந்த வேலைப்பாட்டை உண்டாக்கினபோது, அவர் அவனை வார்த்தைக்கு பின்னால் வைத்தார். அவர் தம்முடைய இரண்டாம் சிறந்த வேலைப்பாட்டை உண்டாக்கிய போது, அவரே வார்த்தையாயிருந்தார். ஆமென். அவர் வார்த்தையாயிருந்தார்; வார்த்தையின் பின்னால் அல்ல. ஆனால், அவர் வார்த்தையாயிருந்தார். தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அதைத்தான் அவர் தம்முடைய முதல் சபையாகிய வார்த்தையைக் கொண்டு செய்யத் துவங்கினார். 134 இப்பொழுது, தேவன், வார்த்தை, ஆதியில், அவர் மற்ற எல்லாவற்றிலிருந்தும், மற்ற எல்லாக் காரியங்களிலிருந்தும், மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் சுயாதீனமாயிருந்தார். இப்பொழுது, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. தேவன் ஒரு பிரிவினைவாதி. அது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒருங்கிணைப்பைக் குறித்து பேசுகிறீர்களா? தேவன் ஒரு பிரிவினைவாதி. அவர் நிச்சயமாகவே செய்கிறார். அவர் தம்முடைய ஜனங்களை உலகத்திலிருந்து பிரிக்கிறார். அவர் இஸ்ரவேலை, அவருடைய தேசத்தை பிரித்தார். அவர் தம்முடைய சபையை உலகத்திலிருந்து பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் சபையோ உலகத்தோடு செல்ல விரும்புகிறது. ஆனால் அவருடைய ஜனங்கள் இன்னமும் பிரிக்கப்பட்டுள்ளனர், அவருக்கென்று பிரிக்கப்பட்டுள்ளனர். அவர் யார்? வார்த்தை. 135 எப்படி ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, வார்த்தையை எழுதின பரிசுத்த ஆவியானவரை, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று வார்த்தையை மறுதலிக்க முடியும்? உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த அதன் சொந்த வார்த்தையை எப்படி மறுக்க முடியும்? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது வார்த்தையோடு இணங்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் உங்களுடைய ஆவி தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றையும் “ஆமென்” என்று வலியுறுத்திக் கூறவில்லையென்றால், ஏதோக் காரியம் தவறாயுள்ளது. 136 சகோதரன் பிரெட் சாத்மன் அல்லது இன்றிரவு இங்குள்ள யாரோ ஒருவர், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று மேற்கோள் காட்டியுள்ளனர். அவர் வார்த்தையாயிருக்கிறார். அது, நிச்சயமாக. அவர் எப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார், பாருங்கள், உங்கள் ஆவி அதற்கு “ஆமென்” என்று கூறி நிறுத்த வேண்டும். 137 "ஓ, அவர், ஒரு விதத்தில் அவர் இருக்கிறார்.” ஒவ்வொரு வழியிலும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 138 இப்பொழுது தேவன் அவரை கிறிஸ்துவுக்கான ஒரு- ஒரு மணவாட்டியாக ஆக்கத் தொடங்கினார் என்பதை நாம் கவனிக்கிறோம். எனவே...மணவாட்டி அவரோடும், அவருக்குள்ளும் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், ஏனென்றால் அது அவருடைய ஒரு பாகமாயுள்ளது. இப்பொழுது, மணவாட்டி அவருடைய ஒரு பாகமாயிருக்கிறாள். அவள் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறாள். அந்த நாளுக்கான வார்த்தை, மணவாட்டி அந்த வார்த்தையின் பாகமாகிறாள், ஏனென்றால் அது கிறிஸ்து. இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும். கிறிஸ்துவில், நாம் கிறிஸ்துவினால், கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவின் பாகமாக இருக்க வேண்டும். 139 ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை ஏற்றுக்கொள்ளும்போது, அல்லது ஒரு மனிதன் ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்ளும்போது, அவள் என்னவாயிருக்கிறாள்? அந்த ஸ்திரீ அவனுடைய பாகமாக இருக்க வேண்டும். அவர்கள் இனி இரண்டு பேர் அல்ல. அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். 140 தேவனும் கிறிஸ்துவும் ஒன்றானபோது, அவர்கள் ஒன்றாயிருந்தனர். காரணம், தேவன் வார்த்தையாயிருந்தார், அந்த வார்த்தை மாம்சமானது. மாம்சமும் வார்த்தையும் ஒன்றாகின. சபையானது கிறிஸ்துவின் மணவாட்டி யாகும்போது, அவளும் சுவிசேஷங்களும் ஒன்றாயிருக்கின்றன. 141 அப்படியானால், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று உங்களால் எப்படி கூற முடியும்? அப்படியானால், "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எப்படி உங்களால் கூற முடியும்? நீங்கள் அவருடைய பாகமாயிருக்கும்போது, “அந்தக் காரியங்கள் ஒரு அப்போஸ்தலனுக்கு அல்லது ஒரு சீஷனுக்கு, அல்லது வேறொரு நாளில் வேறொருவருக்கானவை” என்று எப்படி கூற முடியும்? 142 அவர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை” என்று கூறியிருக்கும் போது. அவர் புஸ்தகத்தை எழுதி முடித்தபோது, வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்தைக் குறித்து என்ன? அவர், “எவனாகிலும் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும் என்று நான் சாட்சியாக கூறுகிறேன்” என்றார். 143 அப்படியானால், “நான் இதை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் அதை விசுவாசிக்கவில்லை” என்று கூறி நாம் எப்படி பரலோகத்திற்கு வரப்போகிறோம்? நீங்கள் முழு வார்த்தையாயிருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் அவருடைய பாகமாயிருக்கிறீர்கள். அந்தவிதமாகத்தான் தேவன் தம்முடைய சபையை இன்றைக்கு உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கோட்பாட்டினால் அல்ல. ஜனங்களே, அவர்கள் நம்மை அதற்குள் பலவந்தம்பண்ண முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள். அது வருவதை உங்களால் காண முடியும். கையெழுத்து சுவற்றில் உள்ளது. நாம் ஒரு உலக சபையாக மாறுவதற்கு நீண்ட காலம் செல்லாது. ஒவ்வொரு சபையும் அதற்குள்ளாக விழுந்துபோக வேண்டியதாயிருக்கிறது, அல்லது சூழ்நிலைகளோடு நிற்கப் போகிறது. பாருங்கள், நீங்கள் அதை சகிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? அது சரியான காரியம் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தால் நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது. 144 நீங்கள் கிறிஸ்துவை உங்களுக்குள் வைத்திருப்பது நல்லது, ஏனென்றால் அந்த வார்த்தை நித்தியமாயுள்ளது, அந்த வார்த்தையே உங்களை மீண்டும் எழுப்பும். நீங்கள் அந்த வார்த்தையின் பாகமாகிவிடுகிறீர்கள். நீங்கள் வார்த்தையோடு அடையாளங்காட்டப்பட்டிருக்கிறீர்கள். இன்றைக்கு, நீங்கள், “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று கூறுகிறீர்கள். 145 "நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள்?” பாருங்கள், அதற்கு கிறிஸ்தவ மார்க்கத்தோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. 146 ஸ்தாபனங்களை வைத்திருப்பது சரிதான். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், பாருங்கள், அது, அப்படித்தான் ஜனங்கள்...அநேக ஜனங்கள் நான் ஸ்தாபனங்களை கிழித்தெறிவதாகவும், நான் அவர்களை உதைத்து தள்ளுவதாகவும் கூறுகிறார்கள். நான் அதை செய்கிறதில்லை. இல்லை ஐயா. ஸ்தாபனங்கள், அவை யாவும் சரிதான். அது பணிபுரியும் ஒப்பந்தங்கள் அல்லது அதைப் போன்ற காரியங்களைப் போன்றது. ஆனால் நீங்கள் அதனோடு நிலைத்திருக்கும்போது, நீங்கள், “நான் ஒரு கிறிஸ்தவன், ஏனென்றால் நான் குறிப்பிட்ட- குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவன்” என்று கூறுகிறீர்கள். அது எந்தக் காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் கிறிஸ்துவினுடைய வராயிருக்க வேண்டும், கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். அநேக சமயங்களில் அந்த ஸ்தாபனங்கள் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசைக்கு எவ்வளவு தூரமாயிருக்கிறதோ, அவ்வளவு தூரமாய் வார்த்தையிலிருந்து விலகியிருக்கின்றன. 147 நீங்கள் மணவாட்டியாயிருக்க, அந்த வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும். நீங்கள் மணவாட்டிக்குள் இருந்தால், நீங்கள் வார்த்தைக்குள்ளாக இருக்கிறீர்கள், அந்த வார்த்தை உங்களுக்குள் இருக்கிறது. கிறிஸ்துவினூடாக தேவனை பிரதிபலித்த வார்த்தை, உங்கள் மூலமாகவும் அதே தேவனை பிரதிபலிக்கிறது. ஆமென். ஆமென் என்றால் “அப்படியே ஆகக்கடவது” என்று பொருள். எனவே, அது அவ்வண்ணமாகவே இருக்கட்டும். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அவரோடு அடையாளங்காட்டப்பட வேண்டும். 148 இப்பொழுது, நான் ஒரு உண்மையான அசலான அமெரிக்கனாக இருக்கப் போவதாயிருந்தால், நான் இந்த தேசத்தின் ஒரு உண்மையான குடிமகனாக இருக்கப் போவதாயிருந்தால், நான் அதனோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும். அந்த தேசம் சரியாகவோ அல்லது தவறாகவோ இருந்தாலும், நான் எப்போதும் அந்த தேசத்தோடு பங்கேற்க வேண்டும். சரியோ அல்லது தவறோ, நான் அவளுக்கு எல்லாமுமாய் இருக்க வேண்டும்; சரியோ அல்லது தவறோ, அவள் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை. நான் ஒரு அமெரிக்கனாயிருக்க வேண்டுமென்றால், நான் இந்த தேசத்தோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும். அது சரியா? அந்த தேசத்தினுடைய மகிமையிலோ அல்லது அதனுடைய அவமானத்திலோ, சுதந்தரத்திலோ அல்லது சுடரொளியிலோ, அது என்னவாயிருந்தாலும், நான் அதனுடைய அழியாமையை உண்டாக்கினவனாக இருக்க வேண்டும். நான் ஒரு பிரிவாக நிற்க வேண்டும். அது இருக்கிற ஒவ்வொரு காரியத்திலும், நான் தான். அது எப்போதும் இருந்த ஒவ்வொரு காரியத்திலும், நான் இருக்கிறேன். அதனுடைய எல்லாவற்றிலும், நான் அதனுடைய பங்காளிகளாயிருக்க வேண்டும். அது உண்மை. 149.ஒரு சில நிமிடங்கள் அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அப்படியானால், அது இருக்க, ஒரு அமெரிக்கராக...நான் முடிக்கையில், நீங்கள் நிச்சயமாக அதைக் காணும்படியாக, நான் அதை உங்களுக்கு எடுத்துரைப்பேன். 150 ஒரு அமெரிக்கனாயிருக்க, அது எப்போதும் செய்திருக்கிற ஒவ்வொரு காரியத்தோடும் நான் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னர் நான் முன்னோர்களோடு பிளைமவுத் பாறையில் தரையிறங்கினேன். நான் பிலிமவுத் ராக் என்ற இடத்தில் யாத்திரிகர்களோடு இருந்தேன். நான் அவர்களோடு அங்கே இருந்தேன். நான் பால் ரீவரோடு ஒரு இரவு சவாரி செய்து, அதனுடைய அபாயங்களைக் குறித்து இந்த தேசத்தை எச்சரித்தேன். நான் அமெரிக்கனாயிருந்தால், நான் அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்களோ, "ஓ, சகோதரன் பிரான்ஹாமே!” என்று கூறலாம். 151. ஒரு நிமிடம் பொறுங்கள். வேதம், எபிரெயர் 7-ம் அதிகாரத்தில், "லேவி தசமபாகத்தை செலுத்தினான், ஏனென்றால் அவன் மெல்கிசேதேக்கை சந்தித்தபோது, ஆபிரகாமின் அரையில் இருந்தான்,” என்று கூறியுள்ளது, அவனுடைய பூட்டனான பாட்டனாருக்குள் இருந்தான், அது அவனுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகத்தைச் செலுத்தியபோது, அவனுடைய கொள்ளுப் பேரன் அவனுடைய அரையில் இருந்தபோது, தேவன் அதை பங்கிட்டார். அவர் அதைச் செய்தாரா? அது உண்மை. 152 இந்த தேசம் என்னவாயிருக்கிறதோ, நான் அவ்வாறே இருக்கிறேன். அது உண்மை. எனவே, நான் பிளைமவுத் பாறையில் தரையிறங்கினேன். நான் பால் ரீவரோடு சவாரி செய்தேன். 153. நான் ஜார்ஜ் வாஷிங்டனுடன் அந்த பனிக்கட்டி நதியில் இருந்த பள்ளத்தாக்கு கோட்டையைக் கடந்தேன். ஆங்கிலேயருக்கு எதிராக காலணிகளே அணியாமல், அணிவகுத்துச் சென்ற அமெரிக்க வீரர்களில் நானும் ஒருவன். அன்று காலை என் பாதங்கள் குளிர்ந்து போயிருந்தபடியால், நான் என் கால்களை போர்த்திக்கொண்டேன். இரவு முழுவதும் ஜெபித்ததிலிருந்து வாஷிங்டன் தன்னுடைய இடுப்பளவு ஈரமான நிலையில், வனாந்திரத்திலிருந்து வெளியே வந்ததை நான் கண்டேன். அது சம்பவித்தபோது நான் அங்கிருந்தேன். 154. எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருந்தபோது, நான் ஸ்டோன்வால் ஜாக்சனோடு நின்றேன். வடக்கின் சேனைகள் அங்கு அனுப்பப்பட்டபோது, அவர்கள், “எல்லா சேனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டன” என்றனர். “ஜாக்ஸன் எங்கே?” என்று கேட்டனர். 155 அதற்கு, “அவர் ஒரு கல் மதிலைப் போல நின்று கொண்டிருக்கிறார்” என்றனர். நான் அவரோடு அங்கே நின்றேன்; நீல நிற கண்களையுடைய, சிறிய, சிறு உருவங்கொண்ட நபர். 156 அவர்கள் ஒரு சமயம் அவரிடம், "எதிர்ப்பு மிகப் பெரியதாயிருக்கும்போது, உங்களால் எப்படி நிற்க முடியும்?” என்று கேட்டனர். 157 மிகவும் அடக்கமான மனிதன், அவர் தன்னுடைய காலணியை இந்த விதமாக உதைத்து, “நான் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நன்றி செலுத்தும் வரையில், நான் ஒரு துளி தண்ணீரையும் குடிப்பதில்லை” என்று கூறினார். அவருடைய திடநம்பிக்கையில் நான் அவரோடு நின்றேன். நான் ஸ்டோன்வால் ஜாக்சனோடு நின்றேன். அது உண்மை. 158 நான் பாஸ்டனில் நடந்த தேநீர் விருந்தில் இருந்தேன். நான் அந்த பிரிட்டிஷ் தேநீரை கடலில் வீச உதவி செய்தேன். நான் ஒரு அமெரிக்கனாக இருக்க வேண்டியதாயிருந்தது. ஆம், ஐயா. ஆம், ஐயா. நான் தாமஸ் ஜெபர்ஸனுடன் சேர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டேன். நான் ஜூலை 4, 1776-ல் விடுதலை மணியை அடித்தேன். 159 சகோதரன் சகோதரனுக்கு எதிராகவும், தகப்பன் மகனுக்கு எதிராகவும் சண்டையிட்டபோது, நான் அதனுடைய புரட்சியின் அவமானத்தில் அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறேன். நான் அதனுடைய மகிமையில் அடையாளங்கண்டு கொள்ளப்படுவது போல, நான் அதனுடைய அவமானத்தில் அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும். அது முற்றிலும் உண்மை. 160 நான் வேக் தீவில் இருந்தபோது, அந்த வீரர்கள் அனைவரும் தங்களுடைய உயிர்களை இழந்தனர். அவர்கள் அதைச் செய்வதை நான் கண்டேன். வேக் தீவை அவர்கள் கைப்பற்றியபோது நான் அவர்களைக் கண்டேன். நான் குவாமில் கொடியை ஏற்ற உதவி செய்தேன். நிச்சயமாக. 161 அது என்னவாயிருந்ததோ, அது எப்போதும் செய்திருக்கிற எல்லாவற்றிலும், இப்பொழுதும் அது இருக்கிற எல்லாவற்றோடும், நான் அதனுடைய ஒரு பாகம் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன், ஏனென்றால் நான் அமெரிக்கனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அவ்வாறில்லையா? 162 ஒரு கிறிஸ்தவனாயிருக்க, நானும் அவ்விதமாகவே இருக்க வேண்டும். அல்லேலூயா! ஆம், ஐயா. நான் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், அப்பொழுது நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வரப்போகும் நியாயத்தீர்ப்புகளைக் குறித்து நோவாவுடன் எச்சரித்தேன். ஆம், ஐயா. அங்கே முன்னமே, நான் அதன் ஒரு பாகமாக இருந்தேன். நான் தேவனுடைய பொருளாட்சியின் பாகமாயிருந்தேன். 163 நான் மோசேயோடு எரிகிற முட்செடியில் இருந்தேன். நான் மோசேயோடு எகிப்திலிருந்து துரத்தப்பட்டேன். நான் வனாந்திரத்தில் ஓடி சென்று, நான் அவனோடு எரிகிற முட்செடியில் இருந்தேன். நான் அவருடைய சத்தத்தைக் கேட்டேன். நான் அவருடைய மகிமையைக் கண்டேன். அந்த முட்செடியில் அக்கினி ஸ்தம்பம் மோசேயினிடத்தில் பேசிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். 164 சிவந்த சமுத்திரம் திறக்கப்பட்டபோது, நான் அவரோடு கூட இருந்தேன். அக்கினி ஸ்தம்பம் சீனாய் மலையின் மேல் நிலைகொண்டதை நான் கண்டேன். நான் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தேன், அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து குடித்தேன். அல்லேலூயா! (நான் இப்பொழுது ஐம்பத்தைந்து வயது என்பதை உணரவில்லை.) ஆமென். ஆம், ஐயா. நான் வனாந்திரத்தில் மன்னாவைப் புசிக்கிறேன், வனாந்திரத்தில் அங்கே முன்னே இருந்த எபிரெயப் பிள்ளைகளோடு நான் புசிக்கிறேன். நான் அடிக்கப்பட்ட அதே கன்மலையிலிருந்து குடித்தேன். 165 அந்த காலையில் யோசுவா எரிகோவின் மதில்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் அவனோடு நின்றேன், அவன் ஒரு மனிதன் நிற்பதைக் கண்டான். அவன் தன்னுடைய பட்டயத்தை உருவிக் கொண்டு அவரைச் சந்திக்க ஓடினான், அவன், “நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ?" என்று கேட்டான். 166 அவர், “நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்றார். யோசுவா தன்னுடைய பட்டயத்தை தரையில் வீசியதை நான் கண்டேன். நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாகிய, அவருக்கு முன்பாக பணிந்தபோது நான் யோசுவாவோடு முழங்காற்படியிட்டேன். எக்காள சத்தத்தில், எரிகோவின் மதில்கள் இடிந்து விழுவதை நான் கண்டேன்.' 167 நான் யோசுவாவைக் கண்டேன், "சூரியனே, தரித்து நில். சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேல் நில். தரித்துநில்” என்றான். சூரியன் அசையாமல் நிற்கவும், சந்திரன் தன்னுடைய ஒளியைக் கொடுக்கத் தவறவில்லை. அவை யாவும் சம்பவிக்கிறதை நான் கண்டேன். 168 நான் தானியேலோடு சிங்கங்களின் கெபியில் இருந்தேன்; அக்கினிச் சூளையில் எபிரெயப் பிள்ளைகளோடு இருந்தேன். 169 ஆகாபும் அவர்களுடைய எல்லா யேசபேல்களும் தங்களுடைய எல்லாவிதமான குட்டையான தலைமுடியையும், தங்களுடைய வர்ணங்களையும், முகச்சாயங்களையும் பூசிக் கொண்டு, சபை அந்த ஒவ்வொரு காரியத்தையும் பெற்றுக் கொண்டு, முழு உலகமும் எலியாவை புறக்கணித்தபோது, நான் அவனோடு இருந்தேன். நான் எலியாவோடு நின்று, தேவனுடைய வார்த்தையின் பேரில், சுத்தமான, தெளிவான செய்தியை உரிமை கோரினேன். அல்லேலூயா! அவன் அங்கே தனியாக நின்றபோது, நான் அவனோடு கர்மேல் மலையில் தங்கியிருந்தேன். அவன் வானத்திலிருந்து அக்கினி இறங்க ஜெபித்ததை நான் கண்டேன். தாவீது கோலியாத்தைக் கொன்றபோது நான் அவனோடு இருந்தேன். தேவனுக்கு மகிமை! 170 பாருங்கள், நான் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், அவை எல்லாவற்றிலும் நான் அடையாளங் காட்டப்பட்டிருக்கிறேன். நான் அதன் பாகமாக இருக்க வேண்டும். ஆம், ஐயா. நான் ஏசாயாவுடன் அவனுடைய நாளில் தீர்க்கதரிசனம் உரைத்தேன். 171 யோவானுடன் நான் யோர்தானில் இருந்தபோது, அவன், புறாவானது அவர் மேல் இறங்கி வருவதை கண்டான். நான் யோர்தானில் யோவானோடு நின்றேன். 172 அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்துவதை நான் கண்டேன்; லாசருவை எழுப்புதல்; யவீருவின் குமாரத்தி மரித்தப் பிறகு, அவள் மீண்டும் ஜீவிக்கும்படி எழுப்பினார். நான் அதைக் கண்டேன். 173. நான் அவருடைய மரணத்தில் அவரோடு அடையாளங் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறேன். அவர் கல்வாரியில் மரித்தபோது, நான் அவரோடு மரித்தேன், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரோடு ஈஸ்டர் காலையில் மீண்டும் உயிர்த்தெழுந்தேன். நான் இன்றிரவு அதற்கு ஒரு சாட்சியாயிருக்கிறேன். நான் அவரோடு கல்வாரியில் மரித்து, ஈஸ்டரில் அவரோடு உயிரோடெழுந்தேன். அல்லேலூயா! அவருடைய ஒரு பாகமாயிருக்க, நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட வேண்டும். அவருடைய மரணத்தில் நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டேன். அவருடைய பாடுகளில் நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டேன். ஸ்தாபனங்கள் அவரை புறக்கணித்தபோது, நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டேன். அவர்கள் அவரை தேவாலயத்திற்கு வெளியே துரத்தினபோது, அவர்கள் அவரை தூக்கி எறிய முயன்றபோது, நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டேன். நான் அங்கே அவரோடு இருந்தேன். நான் அவருடைய மரணத்தில் அவரோடு இருந்தேன், உயிர்த்தெழுதலில் அவரோடு எழுப்பப்பட்டேன். 174. நூற்று இருபது பேர் மேல் வீட்டிற்கு சென்றபோது, நான் அவர்களோடு இருந்தேன். ஆம், ஐயா. வானத்திலிருந்து பலத்த காற்று அடிக்கிறதை நான் சாட்சி பகர்ந்தேன். பெந்தேகோஸ்தே நாளில் நான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடு அந்நிய பாஷையில் பேசினேன். அல்லேலூயா! நான் அங்கிருந்தேன், ஏனென்றால் நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். தேவனுக்கு மகிமை! அது உண்மை. நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் பேதுருவோடு பிரசங்கித்தேன். ஓ, நான் அங்கே அவரோடு பிரசங்கித்தேன். 175. நான் பவுலோடு மார்ஸ் மேடையில் குறைகூறுபவனுக்கு முன்பாக பிரசங்கம் செய்தேன். ஆம், ஐயா. நான் அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. 176. நான் பத்மு தீவில் யோவானோடு இருந்தேன். அவருடைய வருகையின் தரிசனத்தை நான் கண்டேன். நான்...நான்—நான் லூத்தரைக் கண்டேன், சீர்திருத்தத்தின் போது நான் அவரோடு இருந்தேன். நான் வெஸ்லியோடு இருந்தேன். 177. இப்பொழுது நான் இங்கு அரிசோனாவிலுள்ள யூமா என்ற இடத்தில் இருக்கிறேன். அல்லேலூயா! நான் இன்றிரவு அதேக் காரியத்தை விசுவாசிக்கிற ஒரு கூட்ட ஜனங்களோடு இங்கே இந்த ஸ்டார்டஸ்ட் விடுதியில் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். "இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்று கூடி உட்கார்ந்திருக் கிறோம்.” அல்லேலூயா! இந்நாட்களில் ஒன்றில், நான் மகிமையில் அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். அவரோடு அடையாளங்கண்டு கொள்ளப்படுதல்! ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் என்றென்றைக்குமாய் இலவச மாய் நீதிமானாக்கினார்: என்றோ ஒரு நாள் அவர் வருகிறார்—ஓ, மகிமையான நாள்! 178 நான் இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன்; இங்கே வீதியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த ஏதோ ஒரு காரியம் அல்ல. நான் இப்பொழுதே தேவனுடைய மகிமையையும், வல்லமையையும், பாவ மன்னிப்பின் வல்லமையையும் பெற்றுள்ளேன். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறதையும், குருடாக்கப்பட்ட கண்களைத் திறக்கிறதையும், அவர் காரியங்களை முன்னறிவிப்பதையும், ஜனங்களின் இருதயங்களை பகுத்தறிவதையும் நான் காண்கிறேன். இந்த நாளில் அவருடைய ஊழியத்தில் நான் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். தேவனுக்கு மகிமை! நான் இந்தக் கடைசி நாளில் விடுதலைக்காக அவரோடு அடையாளங்காட்டப் பட்டிருக்கிறேன். இந்நாட்களில் ஒன்றில் வரப்போகும் அந்த மகத்தான மணவாட்டியின் ஒரு பாகமாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். 179 உலகம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டேயல்ல, அவர்கள் நம்மை "பைத்தியம் பிடித்தவர்கள், வெறிபிடித்தவர்கள் அல்லது பெயல்செபூல்கள் அல்லது மதவெறியர்கள்” என்று அவர்கள் என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். நான் இன்னமும் அந்தக் குழுவினரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட விரும்புகிறேன். நான் இன்னமும் அங்கே இருக்கிறேன். நான் அங்கேயே தரித்திருக்கிறேன். நான் அங்கே பிறந்தேன். நான் அங்கேயே தரித்திருக்க விரும்புகிறேன். நான் எப்பொழுதும் அங்கிருப்பேன், ஏனென்றால் தேவன் என்னை அங்கே வைத்தார். நான் இருக்கிறேன். ஒரு கூட்ட பரிசுத்த உருளைகளோடு என்னை அடையாளங்காட்டும்படிக்கு நான் என்னுடைய சபையை விட்டு வந்தேன். நானும் அவர்களில் ஒருவன். நான் அவர்களோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். அவர்கள், “பில்லி, நீ உன்னுடைய சிந்தையை இழந்துவிட்டாய்” என்கின்றனர். 180 ஒருக்கால் நான் அவ்வாறு செய்திருக்கலாம், ஆனால் நான் கிறிஸ்துவின் சிந்தையைக் கண்டேன். நான் அவருடைய வார்த்தையைக் கண்டேன், அவருடைய பிரசன்னத்தை கண்டேன், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் கண்டேன்! ...அதைக் குறித்து வேறு எவரும் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இது நான். நான் என்னுடைய அடையாளத்தை அளிக்க வேண்டிய ஒருவனாயிருக்கிறேன். நான் தேவனுடைய வார்த்தையினால் அவரோடு அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். அவர், "விசுவாசிக்கிறவர் களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்றார். நான் அதில் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், ஐயா. 181 உங்களுக்குத் தெரியும், பண்டைய தலைசிறந்த வயலின் கலைஞர், ஒரு சமயம், நீங்கள் அந்த கதையைக் கேட்டிருக்கிறீர்கள், அவர்கள் ஒரு பழைய வயலின் ஒன்றை வைத்திருந்தனர், அதை ஏலத்தில் விட்டார்கள், அவர்கள் அதை விற்க விரும்பினர், யாரும் அதை வாங்க விரும்பவில்லை. அவர்கள், "யார் ஒரு டாலர் கொடுப்பார்? யார் ஒன்றரை டாலர் கொடுப்பார்?” என்று கேட்டார்கள். முடிவாக, “ஒருமுறை, இரண்டு முறை, ஒன்றரை டாலர்கள்” என்றனர். 182.முடிவில் நரைத்த தலைமுடியுடைய ஒரு வயோதிக மனிதன் கூட்டத்திலிருந்து வெளியே வந்தார். அந்த கதையை நீங்கள் அறிவீர்கள். அதை எடுத்து, “நான் அதை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார். அவனுடைய வில்லின் மேல் சிறிது குங்கிலியத்தை தடவி, அதை சில முறை அடித்தார். ஜனங்கள் அழத் துவங்கினர். இந்த விதமாக, அவர்களுடைய முகங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் துவங்கினது. 183 அவர்கள் அதைச் செய்தபோது, ஏலம் எடுத்தவர் மீண்டும் பணத்தை எடுத்து, “அதை எடுக்கப் போகும் ஒருவர் யார்,” என்றார். “ஆயிரம் டாலர்களா, இரண்டாயிரமா, ஐயாயிரமா?” என்று கேட்டார்கள். 184 வித்தியாசம் என்னவாயிருந்தது? எஜமான், அதை அறிந்திருந்த ஒருவர், அதைக் உருவாக்கின ஒருவர், அதிலிருந்து என்ன உள்ளது என்பதை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். 185 நாம் நம்முடைய சபைகளை கோட்பாடுகளிலிருந்தும், ஸ்தாபனங்களிலிருந்தும் வெளியே கொண்டு வர முயற்சிக்கும் வரை, நாம் அதை ஒருபோதும் செய்யவேமாட்டோம். மானிடவர்க்கத்தின் தலைசிறந்த கட்டிடக் கலைஞர், தம்முடைய சொந்த சாயலில் மனிதனை சிருஷ்டித்தவர், அதே காரியத்திற்காக அவரை ஒரு மணவாட்டியாக உருவாக்கிக் கொண்டிருக்கிற, அவருடைய பரிசுத்த ஆவி என்னும் வில்லின் தாக்கம் ஒரு முறை இந்த வார்த்தை உங்கள் இருதயத்தில் படட்டும், அதுவே நம்முடைய மிகச் சிறந்த மாதிரியாயிருக்கும். நீங்கள் எத்தனை பெரிய சபைகளுக்குச் சென்றாலும், எத்தனை பெயர்கள் புத்தகத்தில் இருந்தாலும், அது எல்லா சபைகளையும், ஸ்தாபனங்களையும், கோட்பாடுகளையும், உலகம் முழுவதிலும் உள்ள, உலக சபைகளையும், ஸ்தாபனங்களையும் விட, இயேசு கிறிஸ்துவுக்கு அதிகம் செய்யும். 186 அவர் ஒரு மணவாட்டியை உண்டுபண்ணுகிறார். ஆம், ஐயா. அவர் இப்பொழுது உலகத்தை துண்டித்துக்கொண்டு, சில்லுகளை வெட்டிக் கொண்டிருக்கிறார். ஓ, சபை-இணைதல், கோட்பாடுகள், ஸ்தாபனங்கள், கோட்பாடுகள், யாவும் சபையிலிருந்து துண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுடைய சம்பிரதாயமான கருத்துக்கள், அவர்களுடைய அக்கறையின்மை, அவர்களுடைய உபதேசங்கள் மற்றும் காரியங்கள். திரும்பி வந்து எஜமான் அந்த வில்லை எடுக்கட்டும். எஜமான் உங்களை தம்முடைய கரங்களில் எடுத்து, வார்த்தையை அடித்து, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறட்டும். 187 “கர்த்தாவே, ஆமென். என்னை உருவாக்கி, என்னை வார்ப்பித்து, கர்த்தாவே, நான் என்னவாயிருக்க வேண்டுமோ, என்னை உருவாக்கும்” என்று கூறுங்கள். அப்பொழுது ஒரு வித்தியாசமான காரியம் இருக்கும். 188 அப்பொழுது, “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டால், எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்.” ஆம், ஐயா. 189 அவர் இப்பொழுது உங்களை துண்டித்துக் கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தைக்கு மாத்திரமே உங்களை வெட்டுகிறார், எல்லா பிரமாணங்களையும், கோட்பாடுகளையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும், உங்களிடத்திலிருந்து வெட்டி எறிந்துவிட்டு, குமாரனுக்கான மணவாட்டியாக, மற்றொரு சிறந்த வேலைப்பாடாக, வார்த்தையின் ஒரு பாகமாக திரும்ப முயற்சிக்கிறார். வார்த்தை. 190 இயேசுவால் அந்த ஸ்தானத்தை எடுக்க முடியவில்லை. அவர்கள் அந்நாளில் புத்தகத்தில் வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகத்தை மாத்திரம் வாசித்துவிட்டு, மீதியை கடைசி நாட்களில் விட்டுவிட்டார். நாம் அந்த பாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 191 எனவே, நீங்கள் பாருங்கள், அவர் வெட்டியிருக்கிறார், அவர் குமாரனை வெளியேற்றியது போல், சபையை வெட்ட விரும்புகிறார், மணவாளனாகிய அவர் மணவாட்டிக்கு செய்தது போல. அவருடைய மணவாட்டியாயிருக்க, நீங்கள் அவருடைய ஒரு பாகமாக இருக்க வேண்டும். கோட்பாட்டின் பாகம் அல்ல, சபையின் பாகம் அல்ல, ஸ்தாபனத்தின் பாகம் அல்ல, ஆனால் அவருடைய பாகம். வேறெந்த விதமான வடிவத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டாலும் அது கிரியை செய்யாது. நீங்கள் வார்த்தையிலிருந்து வெட்டப்பட வேண்டும். உலகம் உங்களை துண்டித்துவிட்டு, வார்த்தை உங்களுக்குள் மாத்திரம் ஜீவிக்கும்படி விட்டுவிடுங்கள். 192 மகத்தான சிற்பி உங்களை நம்பிக்கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தை கேட்கும் அவருடைய தேவையின் சாயலில் உங்களை உருவாக்கிக் கொள்ள விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார். "கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.” கிறிஸ்து மாம்சமாக்கப்பட்ட வார்த்தையின் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட சிறந்த வேலைப்பாடாயிருக்கிறார். நீங்கள் மணவாட்டிக்கான சிறந்த வேலைப்பாடாக இருக்கும்படி, அதே வார்த்தையினால், உங்களை அவருக்குள் அடையாளங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 193 இப்பொழுது, சகோதரர்களே, உலகத்திற்கு அளிக்கும் படி தேவன் அப்பொழுது ஒரு சிறந்த வேலைப்பாட்டை உடையவராயிருந்தார், இப்பொழுது அவர் இன்றைக்கு ஒரு சிறந்த வேலைப்பாட்டை விரும்புகிறார். நீங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? என்னுடைய கிறிஸ்தவ நண்பரே, நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? உலகம் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், உங்களுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்காக அவ்வளவாய் பிரதிபலிக்கிறது என்பதில் நீங்கள் உண்மையாகவே நிச்சயமுடையவர் களாயிருக்கிறீர்களா? அவர்கள், “நீங்கள் உங்களுடைய சிந்தையை இழந்துவிட்டீர்கள். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் போய் அந்த பரிசுத்த உருளையர் குழுவில் சேர்ந்து கொண்டீர்கள்” என்கின்றனர். அதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். 194 நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்படவில்லை யென்றால், அந்த சரீரத்தில், தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் இருந்து, அதையே பிரதிபலிக்கவில்லை யென்றால், கிறிஸ்துவின் ஜீவன் உங்களிடத்திலிருந்து பிரதிபலிக்க வேண்டும்; சகோதரனே, சகோதரியே, நீங்கள் அதற்கு வாய்ப்பை எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் எந்தவிதமான அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அந்த வார்த்தை ஒவ்வொரு நாளும் உங்கள் மூலமாக பிரதிபலிக்கட்டும், ஏனென்றால் தேவன், இந்த கடைசி நாட்களில், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 195 அன்புள்ள பரலோகப் பிதாவே, அறிவாற்றலுள்ள ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன்பாக இப்படிப்பட்ட ஒரு எளிமையான முறை உள்ளது. கர்த்தாவே, என்னுடைய கல்வி போது... போதாததாய் இருக்கிறது. மகத்தான பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தைகளை ஜனங்களின் இருதயத்தில் பதியச் செய்ய வேண்டும் என்றும், கர்த்தாவே, நான் என்னுடைய பாணியில் கூறின கோர்வையற்ற காரியங்களை என்ன அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை யென்றாலும், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால், என் இருதயத்தில், நீர்—என்ன செய்ய நீர் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர் என்பதை நான்—நான் காண்கிறேன். 196 பிதாவே, மணவாட்டி மணவாளனின் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவள் மணவாளனைப் போன்றே இருக்க வேண்டும், ஏனென்றால் அவள் அவருடைய ஒரு பாகமாயிருக்கிறாள். அவள் அவருடைய ஒரு பாகமாக ஆகும் வரை அவளால் ஒருபோதும், ஒருபோதும் அவருடைய மணவாட்டியாக இருக்க முடியாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிற வார்த்தையின் ஒரு பாகமாக அது உள்ளது. 197 கோதுமை மணியானது பூமியில் ஒரு காலத்தில் ஜீவித்தது, நிலத்தில் விழுந்து, நிலத்திற்குள் சென்ற தானியத்தின் சாயலில் எழும்பினது. மேலும், கர்த்தாவே, பெந்தெகொஸ்தே நாளில் ஒரு மகத்தான சபை தோன்றினது. மற்றொரு கோதுமை மணியானது, கடைசி நாளுக்கான மணவாளனாகவும், மணவாட்டியாகவும் நியமிக்கப்பட்டது. 198 அது அவருக்காக, ஆயிரம் ஆண்டுகளாக விழுந்துபோனதை நாம் கண்டோம். நிசாயா ஆலோசனை சங்கத்திலிருந்து, அது நிலத்தில் அழுகிக் கொண்டிருந்தது. 199 விமர்சகர்கள் அமைதியான தேவன் என்ற புத்தகத்தில், “அது சிறு பிள்ளைகள் மரித்து, சிங்கங்களால் கொல்லப்படவும், எரிக்கப்படவும் அனுமதித்தார். வாட் போர் வீரர்கள் கிறிஸ்தவர்களை இரத்தசாட்சிகளாக்கி, அவர்களை கழுமரத்தில் எரித்தனர்” என்று எழுதப்பட்டுள்ளது. அந்த மனிதன் ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலை மாத்திரம் பெற்றிருந்தால் நலமாயிருக்குமே! 200 அந்த கோதுமை நிலத்தில் அழுக வேண்டும், ஆனால் அது மீண்டும் துளிர்த்து, அது உள்ளே சென்ற சாயலில் அல்ல. அது ஒரு கோதுமை மணியின் சாயலில் இறங்கியது, ஆனால், அது முளைத்தெழுந்தபோது, அது வளர்ந்து வரும் இளம் கோதுமையைப் போன்ற, சில கதிர்களை உடையதாயிருந்தது. 201.முடிவிலே அது லூத்தரிலிருந்து ஸ்விங்லி வரை வளர்ந்து, முடிவிலே ஒரு பட்டுக் குஞ்சத்திற்கு வந்தது. வெஸ்லியின் நாட்களில் அது தன்னை மாற்றிக்கொண்டது. அது கோதுமை மணியைப் போன்று சற்று அதிகமாக காணப்பட்டது, கதிர்களைப் போல சற்று அதிகமாக காணப்பட்டது. அது மீண்டும் தனக்குத்தானே திரும்பி வருகிறது. 202 அதன்பின்னர் அது எழும்பி, அது கிட்டத்தட்ட உண்மையான, தானியத்தைப் போன்றே காணப்பட்டது. நீங்கள் கீழே உள்ள உமியை பின்னால் இழுத்தால், நீங்கள் அதைக் கண்டறியலாம் அதாவது முதல் கோதுமை மணியில் தானியமே இல்லை, அது ஒரு உமி, ஒரு இலை. கர்த்தாவே, மகத்தான பெந்தேகோஸ்தே எழுப்புதல் புறப்பட்டுச் சென்றது, கர்த்தாவே, கோதுமை பயிர் வரும்போது அதைப் பாதுகாக்க அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். அது செல்வதற்கு இடமே இல்லாதிருந்தது. 203 இப்பொழுது, பிதாவே, நீர் இயற்கையை சிருஷ்டித்தபடியால், நாங்கள் எல்லாவற்றையும் இயற்கையின் மூலமாகவே எடுத்துக் கொள்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். நீர் பூமியை மீட்டுக்கொண்டீர்: நோவாவின் நாட்களில், அவனுடைய பிரசங்கத்திற்குப் பிறகு, நீர் அதற்கு ஞானஸ்நானங் கொடுத்தவிதத்தினாலே; குமாரனின் இரத்தத்தை உமக்காக பரிசுத்தமாக்கும்படி நீர் பூமியின் மேல் சிந்தினீர்; வரப்போகும் மகத்தான காலத்தில், புதுப்பிக்கப்படுகையில், நீர் அதை அக்கினியால் சுட்டெரிக்கப் போகிறீர், உலகப்பிரகாரமான காரியங்களையெல்லாம் எரித்துப்போட வேண்டும். நீர் ஒரு கிறிஸ்தவனுக்கு செய்வது போலவே, நீர் ஒரு கிறிஸ்தவனை இரட்சித்து, அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்; அவனைப் பரிசுத்தப்படுத்துகிறீர்; அதன்பின்னர் அவனிடத்திலிருந்து உலகத்தை எடுத்துப்போட்டுவிட்டு, அவனுக்குள் பரிசுத்த ஆவியை வைப்பதன் மூலம் அவனை உம்முடையவன் என்று உரிமை கோருகிறீர். 204 இந்த கோதுமையும் அதே செயல்முறையினூடாகவே வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு இயற்கையும் ஒரே விதமாகவே கிரியை செய்கிறது. இப்பொழுது, கர்த்தாவே, விதையிலிருந்து பதர் விலகிச் சென்று, உலகப்பிரகாரமாகச் செல்வதை நாங்கள் காணும்போது, ஓ, தேவனே, அந்த தானியங்கள்...குமாரனின் பிரசன்னத்தில் தானியம் விளையக் கூடிய, பதர் விலகிச் செல்ல வேண்டும். கர்த்தாவே, நான் இணைப்பின் வருகையைக் கேட்கிறேன். அதற்கு நீண்ட காலம் இருக்காது. அப்பொழுது அந்த மகத்தான உயர்த்தி சாதனம் அவருடைய மணவாட்டியை தேவனுடைய பிரசன்னத்தில் மகிமைக்குள் கொண்டு செல்லும். 205 பிதாவே, நீர் எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இது எங்களுடைய தருணம் என்பதை நாங்கள் நினைவு கூருவோமாக. நாளை எங்களுக்கு ஒன்று இல்லாமலிருக்கலாம். இன்றைக்கே எங்களுடைய வாய்ப்பு உள்ளது. "இன்று, வெகுகாலத்திற்குப் பிறகு, நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கும்போது, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.” தேவனாகிய கர்த்தாவே, இந்த ஜனங்களை எனக்குத் தெரியாது. இதற்குக் குறைவானவர்கள் இங்கு இருந்தால், இன்றிரவு அவர்கள் தேவனுடைய பரிபூரணத்தைப் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட அருள்புரியும். பிதாவே, இதை அருளும். 206 இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய இருதயங்களும் கூட வணங்கியிருப்போம். நண்பர்களே, என்னுடைய செய்தியை நான் கோர்வையற்று கூறின விதத்திற்காக மன்னிக்கவும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை தேவன் உங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று நான்—நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது...யாரும் கண் திறந்து பார்ப்பதை நான் விரும்பவில்லை. உங்களுடைய தலையை அப்படியே வணங்கியிருங்கள். நான்...நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் நிச்சயமில்லாதிருந்தால், உங்களுடைய ஜீவியம்... 207 இப்பொழுது, பாருங்கள், அந்த செயல்முறைகள் ஒவ்வொன்றும், அவைகள் என்ன செய்தன? அவர்கள் ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றனர். அது என்ன செய்தது? ஆவியானவர் மற்றொருவரிடம், விட்டுச் சென்றார். லூத்தர் ஸ்தாபனமாக்கினவுடனே; அது வெஸ்லிக்கு சென்றது. வெஸ்லி ஸ்தாபனம் உண்டாக்கினார். அது பெந்தெகொஸ்தேயினுள் சென்றது. பெந்தேகோஸ்தே ஸ்தாபனம்; அது எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அக்கினி ஸ்தம்பத்தைப் போன்று, அப்படியே அசைந்து கொண்டேயிருக்கும். 208 சில ஜனங்கள், அவர்கள், "நான் பெந்தேகோஸ்தே" என்று கூறுகின்றனர். அது அருமையாயிருக்கிறது. "நான் லூத்தரன்” அதெல்லாம் சரிதான். அதற்கு எதிராக ஒன்றுமில்லை. 209 ஆனால், நண்பனே, நண்பனே, கோதுமை இன்னமும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் மிகப்பெரிய எழுப்புதல்களில் ஒன்றை உடையவர்களாயிருந்தோம். அது—அது நீண்ட காலம் நீடித்து, ஒரு எழுப்புதல் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் மாத்திரமே நீடிக்கிறது என்பதை வரலாறு காண்பிக்கிறது. இந்த மகத்தான சுகமளிக்கும் கூட்டங்கள் பதினைந்து அல்லது அதற்கும் மேலாக நடைபெற்று வந்தன, ஆனால் இப்பொழுது அது குளிர்ந்து போய்விட்டது. பாருங்கள்! ஒவ்வொரு எழுப்புதலும் எப்பொழுதுமே அதற்குப் பிறகு ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவிக்கிறது. ஏன் இந்த ஒன்று செய்யவில்லை? இங்கே எங்கோ, பின்மாரி என்றழைக்கப்பட்ட ஒரு சிறு குழுவின் சகோதரர்கள் துவங்கியுள்ளனர், அவர்கள் எங்கும் செல்லவில்லை; கீழே விழுந்தது. ஏன்? நண்பர்களே, இது கோதுமையின் காலம். அது கோதுமை. ஆரம் காலத்தில் பூமியில் சாட்சியாயிருந்து மரித்த ஊழியத்தைப் போன்றே ஒரு ஊழியம் உண்டு, ஒரு உண்மையான பெந்தேகோஸ்தே அனுபவம். 210 சபைகள் ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் பெரியதாக உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது, மேலும் படிப்படியாக அதிகமான உறுப்பினர்களையும் மற்ற காரியங்களையும், ஸ்தாபனங்களைப் பெற முயற்சிக்கிறது. நாம் அதைக் காண்கிறோம். நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன். அது விலகிச் செல்வதை நாம் காண்கிறோம். ஆனால் என்ன? குமாரன் தானியத்தை பெற்றுக் கொள்ளும்படியாய், அது அதைச் செய்ய வேண்டியதாயுள்ளது. முதலாவதாக, அது அங்கிருக்கவில்லையென்றால், அதைச் சுற்றிலும் ஒன்றுமே இல்லாதிருந்திருந்தால், அதற்கு செல்வதற்கு இடமே இருந்திருக்காது. தேவன் அதை ஒரு பதராக உண்டாக்கினார், பாருங்கள், தானியத்தைப் போல, கோதுமையைப் போல, நிலத்தடியிலிருந்து விளைந்த மற்றெந்த காரியத்தையும் போல. இப்பொழுது, பாருங்கள், இதற்குப் பிறகு எந்த ஒரு ஸ்தாபனமும் தொடங்கப்படவில்லை. ஏன்? ஒன்றுக்கும் இனி நேரமில்லை. நாம் முடிவில் இருக்கிறோம். 211 நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நீங்கள் சரியாக இல்லாவிடில், அப்பொழுது நீங்கள், "சகோதரன் பிரான்ஹாமே, தேவன் வியாதியஸ்தருக்கான உங்களுடைய ஜெபத்திற்கு செவி கொடுப்பாரானால், கர்த்தர் ஜெபத்திற்கு பதிலளித்ததை நான் கேட்டிருக்கிறேன்..." இன்றைக்கு உலகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிற, மற்றவர்களைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், “நான்...சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா? நான் உங்களை மீண்டும் ஒருபோதும் காணாதிருக்கலாம்” என்று கூறலாம். நானும் உங்களை ஒருபோதும் காணாதிருக்கலாம். “ஆனால் நான் அங்கு இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள். நான் இப்பொழுது அங்கே இருப்பேன் என்று நான் உணரவில்லை. ஆனால் நான் அங்கே இருக்க, நீங்கள் எனக்காக ஜெபிக்கும்படி நான் விரும்புகிறேன்.” 212 இப்பொழுது ஒவ்வொரு தலையும் வணங்கியிருக்கட்டும். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், நீங்கள் உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும், உங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த ஜனங்களின் குழுவில் ஐம்பது, அல்லது எழுபத்தைந்து கரங்கள் உயர்த்தப் பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். 213 இப்பொழுது, அன்புள்ள இயேசுவே, நீரே நியாயாதிபதியாயிருக்கிறீர். நாங்கள் வெறும் ஊழியக்காரர்களாய் இருக்கிறோம். அன்புள்ள தேவனே, நான் ஜெபிக்கிறேன். மேலும்— மேலும் உம்முடைய பார்வையில் எனக்கு கிருபை கிடைத்தால், என் ஜெபத்திற்கு பதிலளியும். ஒவ்வொரு கரமும் மேலே உயர்த்தப்பட்டதை நீர் கண்டீர். அவர்களுடைய இருதயத்தில் என்ன இருந்தது என்பதை நீர் அறிவீர். அவர்கள் ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். சாத்தான், ஆதாமின் நாட்களில் நடந்தது போல, அவன் அந்த சிறந்த வேலைப்பாடு வெளிவராதபடி தடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இன்றிரவு அது நிறுத்தப்படுவதாக. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அதை தடுத்து நிறுத்தி, அவர்கள் தேவனண்டை ஒரு சிறந்த வேலைப்பாடாக வருவார்களாக. பிதாவே, இதை அருளும். 214 அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையில் அடையாளங்கண்டு கொள்ளப்படுவார்களாக. அவர், "ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாலொழிய...” என்றார். அவர்கள் அந்த மறுபடியும் பிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. அவர்கள் உலகத்தின் காரியங்களில் இருந்து யாவற்றையும் புதுப்பிக்கும்படியான, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, அவர்களுக்கு இனிமேல் அது தேவையில்லை. அந்த உலகத்தை அவர்களிடத்திலிருந்து சுத்தப்படுத்தி, ஜனங்களுக்கு முன்பாக அவர்களை ஒரு சிறந்த வேலைப்பாடாக வெளிப்படுத்தும். கர்த்தாவே, இந்த அநுக்கிரகக் காலத்தில் நீர் இங்கே கடைசி நாட்களில் மகிழ்ச்சியாய் இருக்கும்படியாக இதை அருளும், இந்த புருஷர்களும், ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும் தங்களுடைய கரத்தைப் பற்றிக் கொண்ட உம்முடைய சிறந்த வேலைப்பாட்டை அளிக்கிறோம். கர்த்தாவே, அதை அருளும். 215 நகரத்தில் நடந்து கொண்டிருக்கிற இந்த எழுப்புதலை ஆசீர்வதியும். ஓ தேவனே, அருகாமையில் உள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும் அந்த எழுப்புதலுக்கு வருகை தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, எல்லாவிடங்களிலிருந்தும் ஜனங்கள் வருமளவிற்கு, இங்கே இந்த சிறு நகரத்தினூடாக ஒரு பண்டைய மாதிரியான எழுப்புதல் உண்டாவதாக. கர்த்தாவே, அதை அருளும். பிதாவே, இந்தக் காரியங்களை எங்களுக்குத் தாரும், ஏனென்றால் நாங்கள் இவைகளை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 216 நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? பவுல், “நான் பாடினால், நான் ஆவியில் பாடுவேன்” என்று கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் நினைக்கிறேன். நான் ஒரு நல்ல பாடகன் அல்ல. ஆனால் ஒன்று சேர்ந்து, நான் அவரை நேசிக்கிறேன் என்ற அந்த பாடலை நம்மால் துவங்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். சகோதரியே, நீங்கள் எங்களுக்கு சுருதியைத் தருவீர்களா? “ஏனென்றால் அவர் முதலில் என்னிடத்தில் அன்பு கூர்ந்தார்.” நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? உங்களுடைய...அது என்னுடைய பழைய பாடல்களில் ஒன்று என்பதைப் பார்ப்போமாக. நான் அதைப் பாட விரும்புகிறேன். சரி. 217 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கி, நம்முடைய கண்களை மூடி, நான் அவரை நேசிக்கிறேன் என்று இப்பொழுது பாடுவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 218 நாம் அதை மௌனமாக வாய்த் திறவாமல் பாடுவோமாக. என்றோ ஒரு நாள் வானவில்ல்கள் வானத்தை வருடும். ஒரு எக்காள சத்தம் உண்டாகும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்து வருவார்கள். ஓ, அப்படியானால் நாம் அதை எப்படியாய் விரும்புவோம்! என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரியிலே. 219 அங்குதான் அவர் நமக்கான சிறந்த வேலைப்பாடானார். 220. நினைவிருக்கட்டும், எல்லா சிறந்த வேலைப்பாடு களும், அவைகள் புகழ் வாய்ந்த மண்டபத்தில் எப்போதாவது வைக்கப்படுவதற்கு முன்பு, அவைகள் முதலில் தங்களுடைய குறைகூறும் கூடத்தின் வழியாக செல்ல வேண்டும். குறை கூறுபவர்கள் அதை விமர்சிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அது விமர்சகர்களால் நிற்கும்போது, அது புகழின் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தேவனுடைய குமாரன் ஒவ்வொரு ஸ்தாபனஅமைப்பின், ஸ்தாபன, விமர்சகர்களினூடாக கடந்து சென்றார், பிலாத்து, "நான் அவனிடத்தில் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்று கூறினான். யூதாஸ், “நான் குற்றமற்ற இரத்தத்தை காட்டிக் கொடுத்துவிட்டேன்” என்றான். 221 அப்பொழுது தேவன் அவரை எழுப்பி, அவர் இன்றைக்கு கீர்த்தியின் மகத்தான மண்டபத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்து கொண்டு, பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அங்கே அவரோடு சேர்ந்துகொள்ள விரும்பவில்லையா? நீங்கள் அதன் பாகமாயிருக்க விரும்பவில்லையா? உங்களால் இருக்க முடியும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நாம் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருக்கையில், நீங்கள் ஏன் அதை இப்பொழுது அவரோடு பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ...முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 222 நாம் அதை மீண்டும் பாடுகையில், நீங்கள் இப்பொழுது மேஜையிலுள்ள யாரோ ஒருவருடன் கரங்குலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “கிறிஸ்தவ நண்பனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். நாம் இதை மீண்டும் பாடுகையில், நீங்கள் ஒவ்வொருவரும் அதை இப்பொழுது செய்யுங்கள். நான் நேசிக்கிறேன். (எனக்காக ஜெபியுங்கள். எனக்காக ஜெபியுங்கள்.) நேசிக்கிறேன் ஏனென்றால் அவர்......அவரை 223 அது உண்மை, கரங்களைக் குலுக்கி, “எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். நீங்கள் எல்லோரும் எனக்காக ஜெபியுங்கள். நான் அங்கே இருக்க, மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 224 இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கி, நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களை உயர்த்தி, இப்பொழுது அதை அவரிடத்தில் பாடுவோம். நான்...ஓ தேவனே!) நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரியிலே. அங்கே தொங்கிக் கொண்டிருக்கிற உங்களுடைய சிறந்த வேலைப்பாட்டை பாருங்கள். 225 மகத்தான சிற்பி, மகத்தான தேவன் மனிதனை உண்டாக்கி,அவனை உமது சொந்த சாயலில் உருவாக்கி, கர்த்தாவே, இன்றிரவு நீர் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இன்றிரவு, இது ஒரு ஞாபகார்த்தமான இரவாக, இன்றிரவு, இங்கே ஸ்டார்டஸ்ட் விடுதியில் உண்மையான ஞாபகார்த்தமாக எங்களுக்கு இருப்பதாக, நீர் தேவனுடைய புத்திரரின் சாயலுக்கு மனிதரை உருவாக்குவீராக. கர்த்தாவே, அதை அருளும். மகத்தான சிற்பி, நீர் ஒருவரே அதைச் செய்ய முடியும். கர்த்தாவே, நாங்கள் கடைசி நாட்களில் உம்முடைய சிறந்த வேலைப்பாடுகளாயிருந்து, கிறிஸ்துவின் மணவாட்டி என்று அழைக்கப்படும்படியாக உம்முடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதை எங்கள் எல்லோருடைய இருதயங்களுக்குள்ளும் வடிவமையும். அவருக்காக வாழ்வதில் அப்படிப்பட்ட ஒரு உண்மையும், அப்படிப்பட்ட ஒரு சந்தோஷமும் உண்டு என்பதை மற்ற மனிதர்கள் காணக்கூடும். 226 கர்த்தாவே, இந்நாளில் எங்களுடைய சபைகளும் கூட தங்களுடைய உத்தமத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அவர்கள்...அது எல்லாம் ஹாலிவுட்டாக போய்விட்டது போன்று தென்படுகிறது, கர்த்தாவே, என்ன சம்பவித்துள்ளது? அவைகள் ஒரு பிரகாசிப்பதற்குப் பதிலாக ஒரு-ஒரு பளபளப்புக்குப் பின் போய்விட்டன. உலகமானது உலகப்பிரகாரமான கொள்கையினால் பளபளக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் சுவிசேஷமோ அன்பினாலும், கிறிஸ்துவோடும் பிரகாசிக்கிறது. கர்த்தாவே, நாங்கள் உலகத்தின் பளபளப்பிலிருந்து விலகி, கிறிஸ்துவின் பிரகாசத்திற்குள் பிரவேசிக்க அருள்புரியும். 227 கர்த்தாவே, அவர்கள் உம்முடையவர்கள். நீர் அவர்களை கிரயத்திற்கு வாங்கினீர். நீர்..இன்றிரவு, அவர்கள் தங்களுடைய கரத்தை உயர்த்தினார்கள். அவர்கள் அவ்வாறிருக்க விரும்பினர். இப்பொழுது, பிதாவே, நான்...என்னால் கூடுமானால், நான் அவர்களை அப்படி செய்திருப்பேன், ஆனால் என்னால் முடியாது. ஆனால் நான் உம்மையே நம்பியிருக்கிறேன். நீர், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் நியாயத்தீர்ப்புக்குள் வரமாட்டான்,” என்றீர். கர்த்தாவே, இப்பொழுது பாவனையாய் விசுவாசிப்பதல்ல, ஆனால், “அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று விசுவாசியுங்கள். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக, அவர்கள் உம்முடையவர்கள். ஆமென். 228 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவரல்லவா? 229 சகோதரியே, அற்புதம், அற்புதம் என்று ஒரு சிறு ராகத்தை அல்லது சுருதியை எங்களுக்குத் தருவாயாக. நீங்கள் பாட விரும்புகிறீர்களா? நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறேனா? 230 நான் ஆராதிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? இதைப் போன்ற ஒரு சிறிய, கண்டித்துணர்த்தும் செய்தி, நான்... உங்களுக்குத் தெரியும், நான் கண்டித்துணர்த்துவதை வெறுக்கிறேன், ஆனால், நீங்கள்—நீங்கள் ஆணியானது நன்றாக பிடித்துக் கொள்ளும்படி அதை அடிக்க வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆம். நீங்கள் அதை இப்பொழுது அகற்றிவிட வேண்டும். புரிகிறதா? 231 நீங்கள் அந்தப் பாடலை விரும்புகிறீர்களா? "அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு.” அது உங்களுக்குத் தெரியுமா? அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன்; என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! நான் ஒரு காலத்தில் இழக்கப்பட்டேன், இப்பொழுது நான் கண்டெடுக்கப்பட்டேன், ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுதலையாகிறேன், இயேசு விடுதலையையும், ஒரு முழு இரட்சிப்பையும் அளிக்கிறார்; என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! எல்லோருமே! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன்; என்னை இரட்சித்து, எல்லா பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! 232 இப்பொழுது நாம், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுவோமாக. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” நீங்கள் தேய்த்துக் கழுவப்பட்டதாக உணரவில்லையா? நன்றாக உணருகிறீர்களா? கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள். அவர் அற்புதமானவர். 233 நான் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் இப்பொழுது ஆராதனையை சகோதரன், தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளேன்.